Published : 06 Feb 2021 03:08 PM
Last Updated : 06 Feb 2021 03:08 PM

உடல் நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி உத்தரவு

உடல் நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப். 06) வெளியிட்ட அறிக்கை:

"அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த வி. விஜயகுமார்;

செங்கல்பட்டு மாவட்டம், பெருநகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ர. பன்னீர்செல்வம்;

சென்னை பெருநகர காவல், இ-3 தேனாம்பேட்டை காவல் நிலைய போக்குவரத்து பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த தா. ஆரோக்கியசாமி;

மகாகவி பாரதியார் நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஹரிதாஸ்;

நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த த. சுகுமாறன்;

ஜே-8 நீலாங்கரை போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மு. சீனிவாசன்;

ஜே-12 கானாத்தூர் காவல் நிலைய சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரிவில் முதல் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த த. செந்தில்குமார்;

சென்னை காவல் பாதுகாப்பு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ந. எல்லப்பன்;

சென்னை, வீராபுரம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 3 ஆம் அணியில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பா. தமிழ்க்குமரன்;

கோயம்புத்தூர் மாநகர காவல் ஆயுதப்படையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ரா. பேச்சிமுத்து;

போக்குவரத்து புலனாய்வுப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ர. சந்திரசேகரன்;

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த தே. பாஸ்கரன்;

கடலூர் மாவட்டம், முதுநகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பீ.ஆர். மனோகரன்;

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த து. சின்னராஜ்;

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த வா. பவானி;

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சூ. ஈஸ்வரமூர்த்தி;

கரூர் மாவட்டம், தென்னிலை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சு. கணேஷ் பாண்டியன்;

கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த தா. விஸ்வநாதன்;

மதுரை மாவட்டம், சாப்டூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த ரா. சோலைமலைக்கண்ணன்;

ஆயுதப்படையில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஏ.எஸ். கண்ணன்;

நாகப்பட்டினம் மாவட்டம், மணல்மேடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த அ. ராஜேந்திரன்;

புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த செ. ஜவஹர்லால் நேரு;

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சோ. திருநாவுக்கரசு;

திருவாடானை நெடுஞ்சாலை காவல் ரோந்துப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ரா. ராஜா;

சேலம் மாவட்டம், கொளத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ந. சதாசிவம்;

வாழப்பாடி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஐ. ராஜேந்திரன்;

திருச்சி மாநகர், கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பி. ஹெலன் ரூபி;

பொன்மலை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஆர். முனுசாமி;

திருச்சி மாவட்டம், லால்குடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ல. மனோகரன்;

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கி. மாரியப்பன்;

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் போக்குவரத்து விசாரணை பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த வெ. வீரமணி;

நீலகிரி மாவட்ட ஆயுதப்படைப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த டி. சுரேந்திரன்;

திருநெல்வேலி மாநகரம், நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த எஸ். ஹரிகிருஷ்ணன்;

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ரா. சாமுவேல் பாண்டியராஜன்;

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த த. பாலமுருகன்;

திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கே.எஸ். மணி;

விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஜி. சிவசங்கர்;

விருதுநகர் மாவட்டம், எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஏ. கார்த்திக்;

ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சி. மூர்த்தி;

சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை-1, உ-நிறுமம், 28 ஆம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த இ. தமிழ்ச்செல்வன்;

கடலூர் மாவட்டம், பண்ருட்டி போக்குவரத்து பிரிவில் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மா. கிருஷ்ணன்;

மதுரை மாநகர், டி-2 செல்லூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஜே. சசிகுமார்;

பி-2 மீனாட்சி அம்மன் கோவில் காவல் நிலைய சட்ட ஒழுங்கு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ரெ. கோபாலகிருஷ்ணன்;

சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த நாகராஜன்;

தஞ்சாவூர் மாவட்டம், ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்த த. காளிமுத்து;

திருப்பூர் மாவட்டம், மங்களம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ரா. யோகமுரளி;

திருச்சி மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த கி. பிரபாகரன்;

தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ரா. சிவசுப்பிரமணியன்;

விருதுநகர் மாவட்டம், மாரனேரி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பெ. சுப்பாராஜ்;

நத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த கார்த்திக் பாண்டியன்;

ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த மிகுந்த வேதனை அடைந்தேன்.

உடல் நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x