Published : 28 Jan 2021 07:17 AM
Last Updated : 28 Jan 2021 07:17 AM

காஞ்சிபுரம் ரயில் நிலையத்தை தொன்மை வாய்ந்த நிலையமாக அறிவிக்க வேண்டும்: தென்னக ரயில்வே பொதுமேலாளரிடம் மக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ரயில்நிலையத்தில் தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஜான்தாமஸ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். காஞ்சிபுரம் ரயில் நிலையத்தை தொன்மை வாய்ந்த ரயில் நிலையமாக அறிவிக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த ஆய்வின்போது ரயில் நிலைய தண்டவாளத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள், ரயில்வே கேட் பாரமரிப்பு, ரயில் நிலையங்களின் அடிப்படை வசதிகள், ரயில் நிலையம் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா ஆகியவை குறித்து அவர் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து கழிப்பறை மற்றும் ஊழியர்களின் ஓய்வு அறைகளையும் அவர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது இப்பகுதி பொதுமக்கள் தென்னக பொது மேலாளரிடம் ‘காஞ்சிபுரம் புதியரயில் நிலையத்தில் கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் சாலை மேம்பாலத்தை விரைந்து முடிக்கவும், காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணத்துக்கு புதிய ரயில் சேவையைத் தொடங்கவும், ெபண்கள் பயணம் செய்ய கூடுதல் பெட்டியை ஒதுக்கீடு செய்யவும், காஞ்சிபுரம் ரயில் நிலையத்தை தொன்மை வாய்ந்த ரயில் நிலையமாக அறிவிக்கவும் கோரிக்கை வைத்தனர்.

காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னக பொது மேலாளரிடம் மனு அளித்தார்.

இதேபோல் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். இதையடுத்து தனியார் நிறுவனம் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனம் சார்பில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பேட்டரி கார் செயல்பாட்டை அவர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ரயில்வே துறை மண்டல மேலாளர் மகேஷ், ரெனால்டு நிஸான் மேலாளர்கள் கணபதி, நரசிம்மன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா முதுநிலை பொது மேலாளர் லோகேஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x