Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM

கிரண்பேடி பற்றி குடியரசுத்தலைவரிடம் புகார் தர புதுவை முதல்வர், அமைச்சர்கள் டெல்லி பயணம்

புதுச்சேரி

குடியரசுத் தலைவரிடம் ஆளுநர் கிரண்பேடியை பற்றி புகார் தர புதுச்சேரி முதல்வர், அமைச்சர் டெல்லி சென்றுள்ளனர்.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் இடையில் மோதல் வலுத்துள்ளது.

அரசை மீறி, புதுவை கடற்கரைச் சாலையைச் சுற்றிலும் தடுப்புகள் அமைத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட விவகாரம். கோப்புகள் தேக்கம் தொடர்பாக சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டும் அனுமதிக்கப்படாத பிரச்சினை ஆகியவற்றால் ஆளுநர் கிரண்பேடி மீது ஆளும் அரசுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

“ஆளுநர் கிரண்பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீறி செயல்படுகிறார்” என்று முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து கூறி வரும் நிலையில், இப்பிரச்சினைகள் மேலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவரை சந்திக்க முதல்வர் நாராயணசாமி நேரம் கேட்டி ருந்தார்.

இந்நிலையில் இன்றோ, நாளையோ (ஜன. 21, 22) குடியரசுத்தலைவரிடம் நேரம் கிடைக்கப் பெற்றவுடன் அவரை சந்திக்கும் வகையில் நேற்று மாலை முதல்வர் நாராயணசாமி டெல்லி புறப்பட்டார். அவருடன் அமைச்சர் கந்தசாமி, புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் சென்றனர். இந்த டெல்லி பயணத்துடன், மின்துறையை தனியார் மயமாக்கக்கூடாது என்று மத்திய மின்துறை அமைச்சரை சந்தித்து நேரடியாக வலியுறுத்தவும் திட்ட மிட்டுள்ளனர்.

நமச்சிவாயம் செல்லவில்லை

புதுவையின் இதர அமைச்சர் களான மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோரும் அடுத்து புறப்பட்டு செல்வார்கள் என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இப்பயணத்தில் அமைச்சர் நமச்சிவாயம் மட்டும் இடம் பெறவில்லை. அவரது பெயரை தெரிவிப்பதையும் முதல்வர் நாராயணசாமி தவிர்த்து விட்டார்.

அண்மையில், புதுச்சேரி சட்டப் பேரவையில் வேளாண் சட்ட நகலை கிழித்தெறிந்து, அச்சட்டத்திற்கு எதிராக முதல்வர் நாராயணசாமி பேசினார்.

அப்போதும், அதைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தின் போதும் அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x