Published : 20 Oct 2015 09:50 AM
Last Updated : 20 Oct 2015 09:50 AM

லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் கொலை: எல்லை பிரச்சினையால் உடலை மீட்பதில் போலீஸாரிடையே சிக்கல்

செங்குன்றம் அருகே லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் பட்டப்பகலில், மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் அருகே உள்ள மொண்டியம்மன் நகர், கம்பர் தெருவைச் சேர்ந்தவர் அஜய் (23). இவர், லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர். செம்மரக் கடத்தல் வழக்கு ஒன்றில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த இவர், கடந்த ஒரு வாரத் துக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது நண்பர் களான நரேன், கதிரவன் ஆகியோ ருடன் நேற்று காலை 11.15 மணி யளவில், மோட்டார் சைக்கிளில் செங்குன்றம் அருகே திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள காந்திநகர் பெட்ரோல் பங்குக்கு சென்றார். அங்கு பெட்ரோல் போட்டு கொண்டிருந்த போது, அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தது. அந்த கும்பல், மறைத்து வைத்திருந்த அரி வாள் மற்றும் பட்டாக் கத்தி யால் அஜயை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது. இதில், படுகாயமடைந்த அஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் போது, படுகாயமடைந்த நரேன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அஜய் கொலை செய்யப்பட்ட காந்திநகர் பகுதி, செங்குன்றம் மற்றும் சோழவரம் காவல் நிலையங் களின் எல்லையில் உள்ளது. இதனால், யார் வழக்கு பதிவு செய்வது என்பது தெரியாமல் இருந்தது. இதனால், பெட்ரோல் பங்க் பகுதியிலேயே அஜயின் உடல் நீண்ட நேரம் கிடந்தது. ஒரு வழியாக ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு, செங்குன்றம் போலீஸார் அஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

செங்குன்றம் போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாவது: நல்லூர் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த, செங்குன்றம் மற்றும் சோழவரம் போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்பந்தப் பட்ட ரவுடி ஒருவர், குண்டர் தடுப்புச் சட்டத்தில் புழல் சிறை யிலடைக்கப்பட்டு, கடந்த ஒரு மாதத்துக்கு முன் வெளியே வந்துள்ளார்.

அந்த ரவுடி, மாமூல் கேட்டு அஜயை தொந்தரவு செய்து வந் துள்ளார். ஆனால், அஜய் மாமூல் தர மறுத்து வந்துள்ளார். இத னால், கோபமடைந்த ரவுடி அஜயை கொலை செய்தி ருக்க வாய்ப்புள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள் ளது. இதுதவிர வேறு ஏதே னும் காரணம் இருக்குமா எனவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x