Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் மன அழுத்தத்தை குறைக்க வானொலி வசதி

கோவை அரசு மருத்துவமனை எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவோரின் மன அழுத்தத்தை குறைக்க வானொலி வசதி செய்து தரப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து உள்நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில், உள்நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக வானொலி வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவமனை முட நீக்கியல், விபத்து சிகிச்சை துறை இயக்குநர் வெற்றிவேல் செழியன் கூறும்போது, "எலும்பு முறிவு பிரிவில் 8 இடங்களில் வானொலி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் காலையில் 6 மணி முதல் 8 மணி வரையும், மாலையில் 6 மணி முதல் 8 மணி வரையும் செய்திகள் மற்றும் பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்படுகின்றன. இந்த நடவடிக்கைக்கு நோயாளிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், முடநீக்கியல் துறையின் உள்நோயாளிகள் பிரிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. வண்டி தள்ளுவதற்கோ, எக்ஸ்-ரே எடுப்பதற்கோ மருத்துவ ஊழியர்கள் பணம் கேட்டால் துறை மருத்துவர்களிடம் நேரடியாக புகார் தெரிவிக்கலாம் அல்லது 8072126943 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றார். எலும்பு முறிவு பிரிவில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய முயற்சிக்கு டீன் காளிதாஸ் பாராட்டு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x