Published : 05 Jan 2021 08:24 AM
Last Updated : 05 Jan 2021 08:24 AM

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு: தனியார் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மேல்விஷாரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்ற திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திமுக சார்பில் கிராமங்கள் தோறும் ‘மக்கள் கிராம சபை கூட்டம்’ நடத்தப்பட்டு வருகிறது. வேலூர், ராணிப்பேட்டை, திருப் பத்தூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங் களில் நடைபெற்று வரும் மக்கள் கிராம சபை கூட்டங்களில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பங்கற்று பேசி வருகிறார்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளேரி, கொண்ட குப்பம், மருதபாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று நடை பெற்ற மக்கள் கிராம சபை கூட்டங் களில் துரைமுருகன் பங்கேற்றார். பின்னர், கூட்டத்தை முடித்துக் கொண்டு காரில் சென்னை புறப் பட்டுச் சென்று கொண்டிருந்தார். வழியில் அவருக்கு காய்ச்சல் மற்றும் திடீர் உடல் சோர்வு ஏற் பட்டது. இதையடுத்து, மேல்விஷாரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவக் குழுவினர் அவரை சிறிது நேரம் ஓய்வு எடுக்கஅறிவுறுத்தினர். மேலும், மருத்து வக் குழுவினர் அவரது உடல் நிலையை தொடர்ந்து கண் காணித்து வந்தனர். மருத்துவமனை யில் துரைமுருகன் அனுமதிக்கப் பட்ட தகவலறிந்த மாவட்டச் செயலாளர்கள் ஆர்.காந்தி (ராணிப்பேட்டை), ஏ.பி.நந்தகுமார் (வேலூர்), சட்டப்பேரவை உறுப்பி னர்கள் கார்த்திகேயன் (வேலூர்), வில்வநாதன் (ஆம்பூர்) மற்றும் திமுகவினர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் தரப்பில் விசாரித்தபோது ‘‘தொடர்ந்து சுற்றுப்பயணங்களில் இருந்த அவருக்கு சாதாரண காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனும திக்கப்பட்டடு ரத்த அழுத்தம், சர்க்கரை, இசிஜி, சிறுநீரக பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்’’ என தெரிவித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், நேற்று மாலை 6.30 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x