Published : 05 Jan 2021 08:15 AM
Last Updated : 05 Jan 2021 08:15 AM

கரோனா தொற்று தடுப்பூசிகளை விநியோகிக்க பெரிய செயல்திட்டம்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்

இந்தியாவின் முதுகெலும்பாக மருத்துவர்கள் உள்ளனர் என்றும் கரோனா தொற்று தடுப்பூசிகளை விநியோகிக்க பெரிய செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

சென்னை போரூர் ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 32-வதுபட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், காணொலி முறையில் கலந்து கொண்ட மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சிறப்பிடம் பெற்ற மாணவர்களைப் பாராட்டி கவுரவித்தார்.

பின்னர், மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசியதாவது:

கரோனா தொற்று காலத்தில் வெற்றிகரமாக தங்களது பட்டப்படிப்புகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்து
கள். பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் ராமச்சந்திரா கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகள் மெச்சத்தக்க
வகையில் உள்ளன. இந்த தொற்றுசமயத்தில் அதற்கான தடுப்பூசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சிகளும் இங்கு நடைபெற்று வருவது பாராட்டுக்குரியது.

அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறந்த மருத்துவ வசதிகளையும், சுகாதாரக் கட்டமைப்புகளையும் உருவாக்கித் தருவது முக்கியமான சவாலாக இருந்து வருகிறது. மத்திய அரசைப் பொறுத்தவரை தேசத்தின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதத்தை சுகாதார வசதிகளுக்காக ஒதுக்கி வருகிறது. இது பிற வளர்ந்த நாடுகள் செலவிடும் தொகையைக்
காட்டிலும் 18 சதவீதம் அதிகம்.

கரோனா காலத்தில் நாட்டில்உள்ள அனைத்து பகுதிகளிலும் இணையவழியில் மருத்துவ ஆலோசனைகளை வழங்கும்இ-சஞ்சீவினி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மூலம் 23மாநிலங்களில் 11 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

மத்திய அரசின் ஆயுஷ்மான்பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 10.74 கோடி ஏழை குடும்பங்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ரூ.5 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் 1.5 லட்சம் மருத்துவசிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும், மருத்துவஉலகமும், முன்களப் பணியாளர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடுஉழைத்து வருகின்றனர். தேசத்தின் முதுகெலும்பாகவே தற்போதுமருத்துவர்கள் உருவெடுத்துள்ளார்கள்.

கரோனா தடுப்பூசிகளைப் பொறுத்தவரை அவற்றை விநியோகிக்க பெரிய செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
இந்த விழாவில் ராமச்சந்திரா கல்வி நிறுவனங்களின் வேந்தர் வெங்கடாசலம், இணை வேந்தர் செங்குட்டுவன், துணைவேந்தர் மருத்துவர் விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x