Published : 01 Jan 2021 07:23 AM
Last Updated : 01 Jan 2021 07:23 AM

கிழக்கு கடற்கரை சாலையில் மாநகராட்சி மேற்கொள்ளும் மழைநீர் வடிகால் பணிகளை நிறுத்த சுற்றுச்சூழல் துறை உத்தரவு: உத்தரவை மதிக்காமல் பணிகளை தொடர்வதாக பொதுமக்கள் புகார்

கிழக்கு கடற்கரை சாலையில் மாநகராட்சி மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டப் பணிகளை நிறுத்துமாறு, சுற்றுச்சூழல் துறையின் கீழ் வரும்,மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை மதிக்காமல் மாநகராட்சி, பணிகளை தொடர்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் சென்னை மாநகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேற்
கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான நிதியை ஜெர்மன் வளர்ச்சி வங்கி (KFW Development Bank) வழங்கி வருகிறது.

“இத்திட்டம் உரிய சுற்றுச்சூழல்அனுமதியின்றி செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தால், அப்பகுதியில் உள்ள இயற்கையான மழைநீர் தாங்கிகள் பாதிக்கப்படும். கடல் ஆமைகள் முட்டையிடுவது பாதிக்கப்படும். எனவே இப்பகுதிக்கு, இத்திட்டம் தேவையில்லை” என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அது தொடர்பாக ஆய்வு செய்ய வல்லுநர்கள் குழு
வையும் பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ளது. அக்குழுவில் இடம்பெற்றுள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் கடற்கரை மண்டல மேலாண்மை ஆணைய அதிகாரிகள், “சுற்றுச்சூழல் சட்டங்களுக்கு எதிராக பணிகளை மேற்கொண்டு இருந்தால் தொடர்புடைய துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், உரிய சுற்றுச்சூழல் அனுமதி பெறும் வரைபணிகளை நிறுத்த வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவை குறிப்பிட்டு, “பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி, சோழிங்கநல்லூர், உத்தண்டி, பாலவாக்கம் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான அனைத்து பணிகளையும், அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும்” என மாநில கடற்கரை மண்டல ஒருங்குமுறை ஆணையம் உத்தரவிட்டு, மாநகராட்சி ஆணையருக்கு கடந்தடிசம்பர் 23-ம் தேதி அனுப்பியுள்ளது. இந்த உத்தரவையும் மீறிசில இடங்களில் மாநகராட்சி நிர்வாகம் பணிகளை தொடர்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:

பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவின் முதல் கூட்டம் கடந்த 28-ம்தேதி நடைபெற்றது. அதில் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் பங்
கேற்றிருந்தோம். பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், மழைநீர்வடிகால் பணிகளை தொடர்வதாக மாநகராட்சி மீது புகார் தெரிவித்
தோம். பணிகளை நிறுத்துமாறு உத்தரவிட்டிருப்பதாக சுற்றுச்சூழல் அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு மாநகராட்சி சார்பில் பங்கேற்ற அதிகாரிகள், அப்படி ஒரு உத்தரவு வந்துள்ளதா என ஆணையிடம் கேட்டு தெரிந்துக்கொள்கிறோம் என்றனர்.

உடனே சுற்றுச்சூழல் அதிகாரிகள், பணிகளை நிறுத்த ஆணையருக்கு அனுப்பிய உத்தரவு நகல்ஒன்றை எடுத்த மாநகராட்சி பொறி
யாளர்களிடம் கொடுத்து, பணிகளை உடனே நிறுத்துமாறு அறிவுறுத்தினர். இருப்பினும் இந்தஉத்தரவை மதிக்காமல் 30-ம் தேதி இரவு கூட வெட்டுவாங்கேணி பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டது. எனவே அனைத்து பணிகளையும் உடனே நிறுத்த வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x