Last Updated : 26 Oct, 2015 09:01 AM

 

Published : 26 Oct 2015 09:01 AM
Last Updated : 26 Oct 2015 09:01 AM

திறந்தவெளியில் புகை செலுத்துவது தவறான அணுகுமுறை: டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையின்போது சுகாதாரத்துறை முன்னாள் துணை இயக்குநர் ஆதங்கம்

மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலை யில் மாநிலத்தின் பல்வேறு இடங் களில் காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனை கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனைத்திலும் கூட்டம் காணப் படுகிறது. காய்ச்சலுடன் வரும் நோயாளிகளை பரிசோதிக்கும் மருத்துவர்கள், சில நோயாளி களுக்கு டெங்கு காய்ச்சல் தாக்கி யிருப்பது கண்டறியப்பட்டு அவர் களை தனிமைப்படுத்துவதுடன், தனி வார்டுகளில் அனுமதிக்கும் நிலை தற்போது அனைத்து மருத் துவமனைகளிலும் காணமுடிகிறது.

இதனால் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் சுகாதாரத் துறையை முடுக்கிவிட்டு, கிராமப்புறங்களில் முகாம் அமைத்து,டெங்கு பாதிக்கப் பட்ட கிராமங்களில் உள்ளவர்களை பரிசோதிப்பது போன்ற நடை முறைகள் தற்போது மேற்கொள் ளப்பட்டுவருகின்றன. ஒருசில பகுதி களில் மாவட்ட ஆட்சியரே முகா மிட்டு பணிகளை மேற்பார்வையிடு கிறார்.

இது தவிர்த்து டெங்கு விழிப்பு ணர்வு குறித்த துண்டுப் பிரசுரங் கள், பள்ளி மாணவ, மாணவியரைக் கொண்டு ஊர்வலங்கள், சுகாதார ஆய்வாளர்கள் பொதுமக்களிடம் அறிவுரை வழங்குவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

மேலும் ஊராட்சி நிர்வாகங் களும், மாவட்ட நிர்வாகமும் கொசு ஒழிப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக வீதிவீதியாக புகை செலுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் டெங்கு ஒரு அபாயகரமான நோயல்ல, எளிதில் குணமாகக் கூடிய ஒரு காய்ச்சல்தான் எனவும், கொசுவை ஒழிக்க திறந்த வெளியில் ‘சின்த்டிக் பயிர்த்திராய்டு’ எனும் புகை செலுத்துவது தவறான அணுகுமுறை எனவும் ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை துணை இயக்குநர் கே.மதிவாணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியது: டெங்கு என்பது சாதாரண ஜுரம்தான். இதனால் அச்சப்படத் தேவையில்லை. இடது புருவத்தில் வலி, மூட்டு வலி, உடல் அசதியோடு காய்ச்சல் இருக்கும், இவைதான் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி கள். 5 நாட்கள் வரை இந்த காய்ச்சல் இருக்கும்.உடலில் எதிர்ப்பு சக்தி குறைவால் சிலர் எளிதில் இந்தக் காய்ச்சலுக்கு ஆளாகின்றனர். இதை சரிசெய்ய நிலவேம்பு கஷாயம், பப்பாளி சாறு ஆகியவற்றை உட்கொண்டாலே போதுமானது.

“ஈடிஸ் ஈஜிப்டி” என்ற கொசு வகை மூலமாக டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த கொசு சிறிய பரப்பளவில் 7 முதல் 10 நாட்கள் தேங்கியுள்ள தண்ணீரில் உற்பத்தி யாகக் கூடியது. வெப்ப நாட்களில் விரைவில் உற்பத்தியாகும். பகலில் மட்டுமே கடிக்கும். உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் உடனடியாக இந்தக் காய்ச்சலுக்கு ஆளாவர்.

டெங்கு காய்ச்சல் ஒருவருக்கு இருப்பது கண்டறியப்பட்டவுடன் முதலில், நோயாளியைப் பரிசோதிக் கும் மருத்துவர் தைரியமாக இருக்கவேண்டும். இது சாதாரண காய்ச்சல் மட்டுமல்ல. எளிதில் குணப்படுத்தக் கூடியது என்பதை நோயாளிக்குத் தெரிவித்து,அவரை தனிமைப்படுத்துவதை தவிர்த்து அனைவரிடமும் சகஜமாக பேசும் நிலையில் அவரை வைக்க வேண்டும்.

சுகாதாரத்துறை சார்பில் வீதி வீதியாக சென்று திறந்த வெளியில் ‘சின்த்டிக் பயிர்த்திராய்டு’ எனும் புகை செலுத்தும் முறையால் கொசுவை ஒழித்துவிட முடியாது. பூட்டிய வீட்டினுள்தான் இத்தகைய புகையை செலுத்தவேண்டும். அவ் வாறு செலுத்தும்போது, வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை நன்றாக மூடிவிட்டு, கதவு, ஜன்னல் களை மூடி புகையை செலுத்தி வீட்டை சுமார் 1 மணி நேரம் பூட்டி வைக்கவேண்டும். அப்போதுதான் கொசு இறக்கும். திறந்த வெளியில் புகை செலுத்தும்போது, அவை வீட்டுக்குள் புகுந்துவிடும். எனவே கொசு இறக்காது. செய்வதை முறையாக செய்தால் கொசுவை முற்றிலும் ஒழிக்கலாம். மேலும் குப்பை மேலாண்மை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலே 90 சதவீத முழு சுகாதாரத்தை எட்டிவிடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஜவஹர்லாலிடம் கேட்ட போது, ‘‘பொதுவாக டெங்கு காய்ச் சலால் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடு களில் உணவுப் பொருளை மூடி விட்டு புகை செலுத்துவதுதான் முறையானது. நாங்களும் அது போன்றுதான் புகை செலுத்தி வரு கிறோம். அவ்வாறு புகை செலுத் தும்போது டெங்கு கொசுக்கள் இறந்துவிடும். திறந்தவெளியில் வாழும் கொசுக்களை அழிப்ப தற்காக திறந்தவெளியில் புகை செலுத்துவதும் வழக்கமான நடவடிக்கைதான்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x