Published : 30 Oct 2015 09:57 AM
Last Updated : 30 Oct 2015 09:57 AM

உயிர்காக்கும் மருத்துவமனைகளை முறையாக பராமரிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை விழுப்புரம் மாவட் டத்தில் இரண்டாவது நாளாக நேற்று காலை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தொடங்கினார்.

விழுப்புரம் வடக்கு ரயில்வே சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்துக்குச் சென்ற அவர் நடைபயிற்சி செய்தார். பின்னர், மைதானத்தில் இளைஞர்களுடன் கிரிக்கெட், கால்பந்து, இறகுபந்து விளையாடினார்.

அதன்பிறகு, விழுப்புரம் உழவர் சந்தைக்கு சென்ற அவரிடம், அங்கி ருந்த விவசாயிகள் “விழுப்புரம் உழவர் சந்தைக்கு காய்கறிகள் ஏற்றிச் செல்லும் பஸ் கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு விட்டது” என்றனர். பின்னர், புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வர்த்தகர்கள், சமூக நல அமைப்பு கள், நகர பிரமுகர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, “இங்கு நீங்கள் தெரிவிக்கும் குறைகளை எதிர்கால ஆட்சியில் நிறைவேற்ற உறுதியளிக்கிறேன்” என்றார்.

வியாபாரிகள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், ரயில்வே ஊழியர் சங்கத்தினர், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 50 அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகளுடன் பேசினார். அதன் பிறகு, முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு மருந்து வாங்க வரிசையில் நின்ற நோயாளிகளிடம் குறைகளை கேட்டார்.

இதையடுத்து, அவர் செய்தி யாளர்களிடம் கூறும்போது, “எல்லா நிலைகளிலும், இந்த மருத்துவ மனை பராமரிப்பு இன்றி உள்ளது. கலைஞர் உயிர் காப்பீடு திட்ட மும் முறையாக செயல்படுத்தப்படவில்லை.

எனவே, உயிர் காக்கக் கூடியதும் பல்வேறு நோயாளி களுக்கு சிகிச்சையளிப்பதுமான மருத்துவமனைகளையாவது முறையாக பராமரித்து நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என அரசை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x