Published : 15 Dec 2020 03:14 AM
Last Updated : 15 Dec 2020 03:14 AM

எச்.ராஜா தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை குழு: எல்.முருகன் அறிவிப்பு

சென்னை

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு இன்னும் ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில் வாக்குச்சாவடி குழு அமைப்பு, தேர்தல் அறிக்கை தயாிப்பு, கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம் என்று தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வரும் 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்க கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, கே.அண்ணாமலை, மாநிலப் பொதுச் செயலாளர் ஆர்.சீனிவாசன், மாநில செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.கார்வேந்தன், விவசாய அணி மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜ், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா, சிறுபான்மையினர் அணி மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.ஷா, மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர் எம்.நாச்சியப்பன் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x