Published : 14 Dec 2020 06:43 PM
Last Updated : 14 Dec 2020 06:43 PM

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு: 4-ம் கட்ட சுற்றுப்பயணம் விவரம்

சென்னை

டி.ஆர்.பாலு தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு 4-ம் கட்ட சுற்றுப்பயண விவரங்களை வெளியிட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் சேர்க்கவேண்டிய அம்சங்கள் குறித்து கட்சியினர் அளிப்பதோடு, பொதுமக்கள், மற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு அனுப்ப வேண்டும் என்று திமுக தலைமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

“2021-ல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினரிடம் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொது அம்சங்கள் மற்றும் தங்கள் மாவட்டங்களைச் சார்ந்த பொதுநலச் சங்கங்கள் - வணிக அமைப்புகள் - இளைஞர்கள் - விவசாய அமைப்புகள் - தொழிலாளர் அமைப்புகள் - தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களின் நலன் விழையும் அமைப்புகளுக்கும் உரிய முறையில் அழைப்புகள் அளிக்க வேண்டும்.

அவர்களை, அந்தந்த பகுதிகளில், அந்த அமைப்புகளின் நிர்வாகிகள் - உறுப்பினர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும், அந்த துறைகளில் உள்ள பொதுவான பிரச்சினைகள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் நேரில் தெரிவிக்க கீழே அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் தங்கள் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு திருத்தப்பட்ட 4-ம் கட்ட சுற்றுப்பயண விவரம்

டிசம்பர்-27 மாலை 4.00 மணி - கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு

டிசம்பர்-28 காலை 9.00 மணி - திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்தி, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு.

மாலை 4.00 மணி - தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு.

டிசம்பர்-29 காலை 9.00 மணி - விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு.

மாலை 4.00 மணி - ராமநாதபுரம்,

டிசம்பர்-30 காலை 9.00 மணி - சிவகங்கை.

மாலை 4.00 மணி மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மாநகர் வடக்கு, மதுரை மாநகர் தெற்கு.

டிசம்பர்-31 காலை 9.00 மணி - தேனி வடக்கு, தேனி தெற்கு.

மாலை 4.00 மணி திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு.

ஜனவரி -1 காலை 9.00 மணி - கரூர்.

குறிப்பு : காலை நிகழ்ச்சிகள் அனைத்தும் சரியாக காலை 9 மணிக்கும்; மாலை நிகழ்ச்சிகள் அனைத்தும் சரியாக 4 மணிக்கும் தொடங்கப்படும்.

மேற்கண்டவாறு, மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் கட்சி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் சுற்றுப்பயண விவரத்தையும் - கோரிக்கை மனுக்கள் பெறும் இடத்தையும் விளம்பரம் செய்திட வேண்டுமென மாவட்டச் செயலாளர் / பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.

இவ்வாறு திமுக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x