Published : 02 Oct 2015 10:28 AM
Last Updated : 02 Oct 2015 10:28 AM

சென்னை ஆய்வுக் கூட்டத்தில் மதுரை கருவூல அதிகாரி திடீர் மரணம்: பணிச்சுமை அதிகம் என புகார்

சென்னையில் கருவூலத் துறை ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மதுரை மாவட்ட கூடுதல் கருவூல அலுவலர் மூர்த்தி, நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார்.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள மாநில கருவூல கணக்குத் துறை அலுவலகத்தில் இயக்குநர் முனியநாதன் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கூடுதல் கருவூல அலுவலர்கள் 32 பேர் கலந்துகொண்டனர். அப் போது, மதுரை மாவட்ட கூடுதல் கருவூல அலுவலர் மூர்த்திக்கு (55) திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.

இதை அறிந்து, கூட்டத்தில் பங்கேற்ற அலுவலர்கள், ஊழியர்கள் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர். கூட்டத்தை முடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தனர்.

மனஉளைச்சலுடன் வேலை பார்ப் பதே இதுபோன்ற சம்பவங்களுக்கு கார ணம் என்று கூறியும், கருவூல கணக் குத்துறை இயக்குநரைக் கண்டித்தும் மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதுபற்றி தமிழ்நாடு கருவூல கணக்குத் துறை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் மு.சிலுப்பன் ‘தி இந்து’விடம் கூறியபோது, ‘‘5 ஆயிரம் பணியாளர்கள் இருக்கவேண்டிய கருவூலத் துறையில் 3 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். ஆள் பற்றாக்குறை, அதிகாரிகள் தரும் நெருக்குதலுக்கு நடுவில் பணியாற்றுகிறோம். இயக்கு நர் தரக்குறைவாக, அநாகரிகமாகப் பேசு கிறார். இதனால் பலரும் மனஉளைச் சலால் பாதிக்கப்பட்டுள்ளோம். புதுக் கோட்டையில் உதவி கருவூல அலுவலர் மோகன் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கெல்லாம் காரணமான இயக்குநரை பணி மாற்றம் செய்ய வேண்டும்’’ என்றார்.

இதுபற்றி கேட்டதற்கு, மாநில கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநர் சி.முனியநாதன் கூறும்போது, ‘‘மாதாந்திர ஆய்வுக் கூட்டம் என்பது எல்லா துறைகளிலும் உள்ள வழக்கமான நடைமுறை. மின்ஆளுமை திட்டம் வந்த பிறகு, பணிச்சுமை என்பதே இல்லை. புதுக்கோட்டை அலுவலர் 2 ஆண்டு களாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர். அவரது தற்கொலைக்கு காரணம் பணிச்சுமை, உயரதிகாரி தந்த நெருக்கடி என்பது உண்மையல்ல. அவதூறான குற்றச் சாட்டு’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x