Published : 12 Dec 2020 05:19 PM
Last Updated : 12 Dec 2020 05:19 PM

நெல்லையில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் விழா

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தலைமை வகித்து கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கி பேசியதாவது:

பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா எனப்படும் பிரதமரின் தெருவோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதித்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள தெருவோர வியாபாரிகளுக்கு சிறப்பு நுண் கடன் வசதி அளிப்பதற்கான திட்டம் ஜூலை- 1ம் தேதி தொடங்கபட்டது

இத்திட்டம் கரோனா ஊரடங்கால் கடுமையாக பாதிக்கபட்ட தெருவோர வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை மீட்டு எடுப்பதற்காக கொண்டு வரபட்டதாகும்.

இத்திட்டத்தின் கீழ் வியாபாரிகள் ரூ.10 ஆயிரம் வரை கடன் பெற முடியும். இதில் வாங்கும் கடன் ஓராண்டு காலத்தில் மாத தவணையில் திரும்ப செலுத்தபட வேண்டும். உரிய காலத்தில் இக்கடன் தொகை திரும்ப செலுத்தினால் 7 சதவீதம் என்ற அடிப்படையில் வட்டி மானியம் அளிக்கபடும்.

குறிப்பிட்ட பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் செய்பவர்களுக்கு ரூ.50 முதல் ரூ. 100 வரையிலான மாதாந்திர கேஸ் பேக் சலுகையையும் வழங்கப்படுகிறது. முறையாக கடன் திரும்பசெலுத்துவதால் அடுத்த கட்ட கடன் வாங்கும் கடன் தொகை அதிகரித்து பெறுவதற்கு தகுதி பெறுவார்கள் என்பது கூடுதல் அம்சமாகும். அடையாள அட்டை மற்றும் வியாபாரி சான்றிதழ் இல்லாத வியாபாரிகளையும் ஸ்வநிதி திட்டத்தின் மூலம் பயன் பெறுவதற்காக பரிந்துரை கடித முறை வடிவமைக்கபட்டுள்ளது.

இந்த வியாபாரிகள் நகர்புற ஊராட்சி அமைப்பிடம் பாந்துரை கடிதம் வழங்கலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரையில் 1028 நபர்கள் அடையாள அட்டை பெற்ற சாலையோர வியாபாரிகள். இத்திட்டதில் தற்போது 1073 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்து 583 நபர்களுக்கு கடன் ஆணை வழங்கபட்டு மீதமுள்ள விண்ணப்பங்கள் வங்கியில் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்தார்.

மாநகராட்சி ஆணையர் கண்ணன், மகளிர் திடடம் திட்ட இயக்குநர் மைக்கேல் ஆன்டனி பெர்னான்டோ, இந்தியன் ஒவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் பசுபதி, முன்னோடி வங்கி மேலாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x