Published : 10 Dec 2020 11:48 AM
Last Updated : 10 Dec 2020 11:48 AM

'தமிழகம் மீட்போம்!' தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்கள்; நடைபெறும் மாவட்டங்கள் குறித்து திமுக அறிவிப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக கலந்து கொள்ளும் 'தமிழகம் மீட்போம்!' எனும் தலைப்பிலான '2021-சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறும் மாவட்டங்கள் குறித்து திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று (டிச. 10) வெளியிட்ட அறிவிப்பு:

"திமுக தலைவர் ஈரோடு, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, வேலூர், நீலகிரி, மதுரை, விழுப்புரம், தருமபுரி, சேலம், திருநெல்வேலி/தென்காசி, திருப்பூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் காணொலிக்
காட்சி மூலமாக 'தமிழகம் மீட்போம்!' எனும் தலைப்பிலான '2021-சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சிறப்புப் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, மூன்றாவது கட்டமாக சிறப்பு பொதுக்கூட்டங்கள் கீழே குறிப்பிட்டுள்ள தேதிகளில் வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட திமுக மாவட்டங்களை ஒருங்கிணைத்து நடைபெறும்.

2020 டிசம்பர் 12 (சனி) - ராமநாதபுரம்

டிச. 14 (திங்கள்) - திண்டுக்கல்

டிச. 17 (வியாழன்) - கடலூர்

டிச. 19 (சனி) - திருவள்ளூர்

டிச. 23 (புதன்) - சிவகங்கை

டிச. 26 (சனி) - தஞ்சை

டிச. 28 (திங்கள்) - நாகை/ திருவாரூர்

டிச. 29 (செவ்வாய்) - திருவண்ணாமலை

டிச. 31 (வியாழன்) - அரியலூர்/பெரம்பலூர்".

இவ்வாறு திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x