Last Updated : 08 Dec, 2020 04:58 PM

 

Published : 08 Dec 2020 04:58 PM
Last Updated : 08 Dec 2020 04:58 PM

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்தச் சட்டம் ஆகிவற்றை எதிர்த்து தேனியில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்தச் சட்டம் ஆகிவற்றை எதிர்த்தும், அச்சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் கடந்த 12 நாட்களுக்கும் மேலாக கடும் குளிரிலும் வீரம் செறிந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயங்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது .

கம்பம் ,போடி ,ஆண்டிபட்டி ,கூடலூர் ,பெரியகுளம் ,தேனி ,சின்னமனூர் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வணிகர்கள் கடைகளை அடைத்தனர்.

பெரும்பாலான இடங்களில் ஆட்டோக்கள் இயங்க வில்லை .போடி ,கம்பம் ஆகிய இடங்களில் உணவகங்கள் அடைக்கப்பட்டன .இடது சாரி கட்சிகள் சார்பில் தேனி மாவட்டத்தில் 8 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது .

தேனி ;

தேனி பள்ளிவாசலிலிருந்து பேரணியாக புறப்பட்டு ஐஓபி வங்கி நோக்கி செல்ல முயன்றனர் .அவர்களை தேனி டிஎஸ்பி முத்துராஜ் தலைமையிலான காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய முயற்சி செய்தனர் .அப்போது இடது சாரி கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியல் ஈடுபட்டனர் .அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர் .அப்போது இருவரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது .இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பட்டது . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எல்.ஆர்.சங்கரசுப்பு ,டி.கண்ணன் ,மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.முனீஸ்வரன் ,ஏ.முருகவேல் ,இ.தர்மர் ,டி.நாகராஜ் சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.திருமலை கொழுந்து ,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம் ,எஸ்யுசிஐ மாவட்ட செயலாளர் டி.சி.சத்திய மூர்த்தி ,சிபிஐ எம்.எல் மாவட்ட செயலாளர் கிருஷ்ண மூர்த்தி ,மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜ் உள்ளிட்ட 90 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் .சிபிஐ மாவட்ட செயலாளர் பெருமாள் போராட்டத்தை ஆதரித்து பேசினார் .

கம்பம் ;

கம்பம் நகரில் காந்தி சிலையிலிருந்து பேரணியாக புறப்பட்டு ஐஒபி வங்கி முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது .போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏரியாசெயலாளர் ஜிஎம் நாகராஜன் மாவட்டக்குழு உறுப்பினர் கே ஆர் லெனின் ஏரியாக்குழு உறுப்பினர்கள் பி அய்யப்பன் ,பி முருகேசன் ,எஸ் கனகராஜ் , எஸ் காஜா மைதீன் சிபிஐ நிர்வாககுழு உறுப்பினர் பி தங்கம் நகரசெயலாளர் எம்வி கல்யாண சந்தரம் ஒன்றிய செயலாளர் மதணகோபால் வி ராஜேந்திரன் , மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் ராஜேந்திரன் முருகன் விசிக ஒன்றிய செயலாளர் பெரியசாமி நகர் செயலாளர் மோகன் அஇ பார்வார்டு பிளாக் நகரசெயலாளர் அறிவழகன் சேகர் உட்பட 70பேர் கைது செய்யப்பட்டனர் முன்னதாக மோடியின் உருவபடத்தை எரிக்க முயன்றபோது காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது .

பெரியகுளம் ;

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெரியகுளம் எல்ஐசி அலுவலகத்திலிருந்து தாலுகா செயலாளர் எம்.வி. முருகன் தலைமையில் ஊர்வலமாக சென்று மூன்றாந்தலில் மறியலில் போராட்டம் நடைபெற்றது .மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். ராமச்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் P. இளங்கோவன், ஆர்.கே.ராமர், எஸ். வெண்மணி, தாலுகா குழு உறுப்பினர்கள் ஜி. முத்துகிருஷ்ணன், ஏ. மன்னர் மன்னன், பி. வீரு, எஸ். கணேசன், சி. நாகராஜ் , ஆர். காளிச்சாமி, பி. பிரேம்குமார் உள்ளிட்ட 56 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் .

முழு அடைப்பை முன்னிட்டு ஊர்வலமாக சென்ற திமுக உயர்நிலை செயல் திட்ட உறுப்பினர் எல்.மூக்கையா ,ஒன்றிய செயலாளர் எல்.எம்.,பாண்டியன் ,நகர் செயலாளர் முரளி உள்ளிட்ட 70 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் .

சின்னமனூர் ;

சின்னமனூர் ரவுண்டானாவில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தார் .ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.பொம்மையன் ,பி.ஜெயராஜ் ,ஈஸ்வரி உள்ளிட்ட 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் .

போடி ;

போடியில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜப்பன் ,சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் என்.ரவி முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர் .மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தாலுகா செயலாளர் எஸ்.செல்வம் ,எஸ்.கே.பாண்டியன் மற்றும் தங்கபாண்டி ,சிபிஐ நகர் செயலர் முருகேசன் ,சத்யராஜ் ,மக்கள் அதிகாரம் நிர்வாகி ஜோதிபாசு ,மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சையது இப்றாகிம் உள்ளிட்ட 56 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் .

பாளையம் ;

பாளையம் ஒன்றியம் கோம்பையில் இடது சாரி கட்சிகளின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது . மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் சி.வேலவன் ,மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.மோகன் ,எஸ்.சுருளிவேல் ,எஸ்.சஞ்சீவி ,சி.மு.இப்றாகிம் ,சிபிஐ ஒன்றிய செயலாளர் பாண்டி உள்ளிட்ட 32 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் .திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் கம்பம் என்.ராமகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார் .

ஆண்டிபட்டி ;

ஆண்டிபட்டியில் முழு கடையடைப்பு போராட்டத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் ,மாவட்ட துணைச்செயலாளர் ராஜாங்கம் ,மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் எஸ்.ராமர் ,தங்கவேல் ,பி.ராமன் ,எஸ்.அய்யர் ,சிபிஐ ஒன்றிய செயலாளர் பிச்சைமணி ,முனீஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x