Published : 01 Dec 2020 19:58 pm

Updated : 01 Dec 2020 19:58 pm

 

Published : 01 Dec 2020 07:58 PM
Last Updated : 01 Dec 2020 07:58 PM

கார்த்திகைத் தீபத் திருவிழா: கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் அண்ணாமலையார் பவனி

karthika-deepa-festival-annamalaiyar-bhavani-in-the-5th-prakaram-in-the-temple
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் பவனி வந்து அருள்பாலித்த அண்ணாமலையார்.

திருவண்ணாமலை

கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் அண்ணாமலையார் இன்று (டிச.1) பவனி வந்து அருள்பாலித்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா கடந்த நவம்பர் 17ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் கடந்த 29-ம் தேதி மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.


இதையடுத்து, அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிரம்மத் தீர்த்தக் குளத்தில் தெப்பல் உற்சவம் நேற்று இரவு தொடங்கியது. முதல் நாளில் சந்திரசேகரரின் உற்சவமும், 2-வது நாளான இன்று பராசக்தி அம்மனின் உற்சவமும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 3-வது நாளான நாளை முருகரின் உற்சவம் நடைபெற உள்ளது.

மலையே மகேசன் என்றழைக்கப்படும் அண்ணாமலையைப் பக்தர்கள் கிரிவலம் செல்வதுபோல், திருவூடல் திருவிழா மற்றும் கார்த்திகை தீபத் திருவிழாவுக்குப் பிறகு என ஆண்டுக்கு 2 முறை கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அண்ணாமலையார் அருள்பாலிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளால், கார்த்திகைத் தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையாரின் கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால், கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில், சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார் இன்று பவனி வந்து அருள்பாலித்தார்.

தவறவிடாதீர்!


Annamalaiyar BhavaniKarthika Deepa Festivalகார்த்திகைத் தீபத் திருவிழாகார்த்திகைத் தீபம்அண்ணாமலையார் பவனிதிருவண்ணாமலைஅண்ணாமலையார் கோயில்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x