Published : 01 Dec 2020 03:16 AM
Last Updated : 01 Dec 2020 03:16 AM

சென்னையில் பெரும்பாலானோர் குணமடைந்ததால் கரோனா சிகிச்சைக்கான 25,000 படுக்கைகள் காலியாகின

சென்னை

சென்னையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், கண்காணிப்பு மையங்களில் 25,000 படுக்கைகள் காலியாகஉள்ளன.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் அரசு மருத்துவமனைகளில் 5 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் 750 படுக்கைகளுடன் அரசு கரோனா மருத்துவமனை அமைக்கப்பட்டது.

நந்தம்பாக்கம் வர்த்தக மையம்,லயோலா கல்லூரி, குருநானக் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் விடுதி உள்ளிட்ட பல்வேறுஇடங்களில் 17,500 படுக்கைகளுடன் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டன.

இவை தவிர தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சைக்காக மொத்த படுக்கைகளில் தலா25 சதவீத படுக்கைகள் அரசின்உத்தரவுப்படி ஒதுக்கப்பட்டன.

சென்னையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்து 15 ஆயிரம் பேரில், 2 லட்சத்து 7 ஆயிரம் பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். 3,850 பேர் உயிரிழந்தனர். தற்போதைய நிலையில், 2,858 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

இதன்மூலம் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்கான வார்டுகளில் 3,400 படுக்கைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள், கண்காணிப்பு மையங்களில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாகவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x