Published : 01 Oct 2015 10:45 AM
Last Updated : 01 Oct 2015 10:45 AM

நிரந்தரப் பதிவுமுறை கட்டாயமாகிறது: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப முறையில் மாற்றம் - சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருவதை தவிர்க்க புதிய வசதி

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண் ணப்பதாரர்கள் நேரில் வருவதைத் தவிர்க்க புதிய வசதி ஏற்படுத் தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

டிஎன்பிஎஸ்சி இணையவழி விண்ணப்பத்தில் ஒருசில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை நிரந்தரப்பதிவு முறை (One Time Registration) விருப்ப அடிப்படையில் இருந்து வந்தது. இனிமேல் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் நிரந்தரப்பதிவு முறை கட்டாயமாக் கப்படுகிறது. நிரந்தரப்பதிவு என்பது விண்ணப்பதாரர்கள் தங்களின் விவரங்களை முன்னதாகவே பதிவுசெய்துகொள்ளும் முறை ஆகும்.

இதுவரை நிரந்தரப்பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் கண்டிப் பாக நிரந்தரப்பதிவு செய்துகொண்டு தங்கள் பயனாளர் குறியீடு (லாக்- இன் ஐடி), பாஸ்வேர்டு ஆகியவற் றைப் பயன்படுத்தி தங்களுக்கான சுயவிவரப் பக்கத்தை (Dashboard) ஏற்படுத்திக்கொள்ளலாம். அதில் உள்ள விவரங்களை தேவைப் படும்போது மாற்றிக்கொள்வதுடன் கூடுதல் விவரங்களையும் பதிவு செய்துகொள்ளலாம்.

புதிய முறையின் பயன்கள் வருமாறு:

# விண்ணப்பதாரர்கள் தங்கள் லாக்-இன் ஐடி, பாஸ்வேர்டு ஆகியவற்றை தாங்களாகவே உருவாக்கிக்கொள்ளலாம்.

# விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தேர்வுக்கான விண்ணப்பத்தின் விவரங்களையும் தன் விவரப் பக்கத்தில் பார்த்துக்கொள்ள லாம்.

# தேர்வுக் கட்டணம் செலுத்திய விவரங்களை தெரிந்துகொள்ள முடிவதால் தாங்கள் இதுவரை எத்தனை முறை கட்டணச் சலுகையை பெற்றிருக்கிறோம் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள முடியும்.

# பாஸ்வேர்டு மறந்துவிட்டால் இனிமேல் டிஎன்பிஎஸ்சி அலு வலகத்தை தொடர்புகொள்ளத் தேவையில்லை. அவர்களா கவே பாஸ்வேர்டை உருவாக்கிக் கொள்ளலாம்.

# விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போதோ அல் லது தேர்வுக்குப் பின்னரோ சான்றிதழ்களை இணையதளத் தில் பதிவேற்றம் செய்ய வழி வகை செய்யப்படும். இதனால், அவர்கள் சான்றிதழ் சரிபார்ப் புக்கு நேரில் அழைக்கப்படுவது தவிர்க்கப்படும். சான்றிதழ்களில் ஏதேனும் சந்தேகம் ஏற்படும்பட் சத்தில் அந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் நேரில் அழைக்கப்படுவர்.

# விண்ணப்பதாரர்கள் ஆளறித் தன்மைக்காக (Identity) தங்கள் எஸ்எஸ்எல்சி சான்றிதழ் பதி வெண், தேர்ச்சி பெற்ற மாதம், ஆண்டு ஆகியவற்றை கண்டிப் பாக பதிவுசெய்ய வேண்டும். இந்த விவரங்கள் தவறாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும்போது அவை தெளிவில்லாமல் இருந் தாலோ அல்லது தொடர்பு இல்லாமல் இருந்தாலோ விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

நிரந்தரப்பதிவு மற்றும் இணைய வழி விண்ணப்பம் ஆகியவை தொடர்பான விவரங்கள் டிஎன்பி எஸ்சி இணையதளத்தில் ( >www.tnpsc.gov.in) கொடுக்கப்பட் டுள்ளன. ஏதேனும் சந்தேகம் ஏற் பட்டால் 1800-425-1002 என்ற கட்டண மில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x