Published : 12 Mar 2014 12:00 AM
Last Updated : 12 Mar 2014 12:00 AM

பொதுநல அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்று தயாரான தி.மு.க. தேர்தல் அறிக்கை: அறிக்கை குழுவில் இடம்பெற்ற பேராசிரியர் அ.ராமசாமி பேட்டி

பொதுநல அமைப்புகள், தொழிற்சங்கங்கள், ஆசிரியர் அமைப்புகள் உள்ளிட்டவைகள் அளித்த கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மாற்றுக் கட்சிகளை சாடும் அம்சங்களை தவிர்த்துவிட்டு, மத்தியில் தாம் அங்கம் வகிக்கும் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு எதையெல்லாம் சாதித்துக் கொடுப்போம் என்பதை மட்டும் சொல்லும் அறிக்கையாக திமுக தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும் என்று அறிக்கை தயாரிப்பு குழுவினருக்கு அறி வுறுத்தி இருந்தாராம் கருணாநிதி.

தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் அங்கம் வகித்த பேராசிரியர் அ.ராமசாமி ’தி இந்து’வுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது: கலைஞர் ஆட்சியில்தான் பட்ஜெட் உரை தயாரிக்கப்படுவதுக்கு முன்பாக துறை சார்ந்த வல்லுநர்களையும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்துக் கருத்து கேட்பார்.

நியாயமான கோரிக்கைகள்

அதுபோலவே இந்தத் தேர்தல் அறிக்கையும் அமைந்துவிட்டது. அந்த நம்பிக்கையில்தான், வணிகர் சங்கங்கள், மீனவர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், விவசாய சங்கங்கள் என பல அமைப்புகளும் பொதுமக்களும் திமுக தேர்தல் அறிக்கையில் இன்னின்னதெல்லாம் இருக்க வேண்டும் என்று எங்களுக்கு கடிதம் எழுதி இருந்தார்கள். அதில் உள்ள நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் தேர்தல் அறிக்கையில் சேர்க்கச் சொல்லியிருந்தார் கலைஞர்.

முழு சுதந்திரம்

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் விஷயத்தில் கலைஞரும் ஸ்டாலினும் எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தார்கள். மத்திய அரசு அலுவலகங் களிலும் வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழை இணை ஆட்சிமொழியாக பிரகடனம் செய்ய வேண்டும் என்பது தேர்தல் அறிக்கையில் கலைஞரின் விருப்பப்படி சேர்க் கப்பட்ட அம்சம். எங்கள் குழுவில் இருந்த கனிமொழி தனக்கிருந்த சின்னச் சின்னச் சந்தேகங்களைக் கூட எங்களிடம் கேட்டுத் தெளிவு படுத்திக் கொண்டது பிரமிக்க வைத்தது.

ஏழு பேர்... மூன்றுமுறை...

அறிக்கை தயாரிப்பு குழுவினர் ஏழு பேரும் மூன்றுமுறை அமர் வுகளில் கலந்து பேசி விவாதித்து தேர்தல் அறிக்கையை தயாரித் தோம். அறிக்கையை படித்துப் பார்த்த பத்திரிகையாளர்கள் அனைவரும் பாராட்டினார்கள்; எங்களுடன் கைகுலுக்கினார்கள். எனவே மக்கள் மத்தியிலும் திமுக தேர்தல் அறிக்கை நிச்சயம் பேசப்படும். இது தேர்தலுக்காக வெளியிடப்பட்ட சம்பிரதாய அறிக்கை அல்ல.. மக்களுக்கு செய்துகொடுக்கப் போகும் சாதனைகளை சொல்லும் அறிக்கை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x