Published : 19 Nov 2020 03:15 AM
Last Updated : 19 Nov 2020 03:15 AM

தி.மலை மாட வீதிகளில் தேர் திருவிழாவை நடத்துவது குறித்து மாவட்ட நிர்வாகம் தான் முடிவெடுக்க முடியும்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

திருவண்ணாமலை தீபத் திரு விழாவை முன்னிட்டு நான்கு மாட வீதிகளில் தேர்த்திருவிழாவை நடத்துவது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம்தான் இணைந்து முடி வெடுக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரி வித்துள்ளது.

திருவண்ணாமலை அருணாச் சலேஸ்வரர் கோயிலில் கார்த் திகை தீபத் திருவிழா மற்றும் தேர்த் திருவிழாவை வழக்கமான நடைமுறையில் நடத்த தமிழக அரசு மற்றும் கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிடக்கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் வட தமிழக துணைத் தலைவர் வி.சக்திவேல் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், கரோனா தடுப்பு நட வடிக்கைகளைக் காரணம் காட்டி திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் தேர்த்திருவிழாக்களில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கக்கூடாது என கோரியிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது, தீபத் திருவிழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும், கோயில் வளாகத்துக்குள் தேர் திருவிழா நடத்தப்படும் என அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், ‘‘தீபத் திருவிழாவை தவிர்த்து மற்ற நாட்களில் 5,000 பேரை அனுமதிப்பதாக கோயில் நிர்வாகம் கூறும்போது உற்சவ மூர்த்திகள் ஊர்வலம் மற்றும் தேர் திருவிழாவை வழக்கமான நடைமுறையில் நான்கு மாட வீதிகளில் நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக் கப்பட்டது.

அதற்கு கோயில் நிர்வாகம் தரப்பில், ‘‘தீபத் திருவிழா தவிர்த்து மற்ற நாட்களில் காலை 8 முதல் மாலை 6 மணி வரை ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் 800 பக்தர்கள் வீதம் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். கரோனா வழிமுறைகள் முறையாக பின்பற்றப் படும். கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில்தான் உற்சவ மூர்த்திகள் ஊர்வலமும், தேர்த் திருவிழாவும் கோயில் வளாகத்துக்குள்ளேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல தெப்பத்திருவிழாவும் கோயில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் நடத்தப்படும். இந்த திருவிழாக்களில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. வரும் டிச.3 அன்று சண்டிகேஸ் வரர் விழாவுடன் இத்திருவிழா நிறை வடையும் என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில், கோயில் திருவிழாக்கள் ஆகம விதிகளின்படி நடத்தப்பட வேண்டும். அரசியல் விழாக்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை அனு மதிக்கும் தமிழக அரசு, மத ரீதியிலான நிகழ்வுகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கிறது என குற்றஞ்சாட்டினர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உற்சவர் ஊர்வலம், தேர்த் திருவிழாவை மாட வீதி களில் நடத்துவது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் தான் இணைந்து முடி வெடுக்க முடியும் என கருத்து தெரிவித்தனர். பின்னர், இது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. பொதுநலன் கருதியே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்றும், அடுத்தாண்டு இயல்புநிலை திரும்பி விட்டால் கார்த்திகை தீபத் திருவிழா வழக்கமான நடைமுறையில் நடைபெறும் எனக்கூறி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x