மண்ணச்சநல்லூரில் இளம்பெண் தற்கொலை: திமுக கிளைச் செயலாளர் உள்பட 6 பேர் கைது

உத்​தமர்​கோ​விலில்​ திருச்​சி-சேலம்​ சாலை​யில்​ மறியலில்​ ஈடு​பட்​ட சிந்​துஜா​வின்​ உறவினர்​கள். (உள்படம்) சிந்​துஜா

உத்​தமர்​கோ​விலில்​ திருச்​சி-சேலம்​ சாலை​யில்​ மறியலில்​ ஈடு​பட்​ட சிந்​துஜா​வின்​ உறவினர்​கள். (உள்படம்) சிந்​துஜா

Updated on
2 min read

திருச்சி: மண்​ணச்​சநல்​லூர் தொகு​தி​யில் பரிசுப் பொருள் தராததை கண்​டித்த பெண்ணை திமுக​வினர் ஆபாச​மாக பேசி தாக்​கிய​தாக​வும் இதனால் மனஉளைச்​சலில் அவர் தற்​கொலை செய்ததாகவும் கூறப்​படு​கிறது.

இதற்கு காரண​மானவர்​கள் மீது உரிய நடவடிக்கை எடுக்​கக் கோரி பெண்​ணின் உறவினர்​கள் சாலை மறியலில் ஈடுபட்​டனர். இதுதொடர்​பாக போலீஸார் வழக்​குப்பதிவு செய்து திமுக கிளைச் செய​லா​ளர் உள்பட 6 பேரை கைது செய்​தனர். மேலும் 3 பேரை தேடி வரு​கின்​றனர்.

திருச்சி மாவட்​டம் மண்​ணச்​ச நல்​லூர் தொகு​தி​யில் தாளக்​குடி ஊராட்​சிக்​குட்​பட்ட வாழக்​கட்டை பகு​தி​யில் திமுக வேட்​பாளர் கதிர​வனுக்கு ஆதர​வாக அப்​பகு​தி​யைச் சேர்ந்த திமுக​வினர் சிலர், வாக்​காளர்​களுக்கு நேற்று முன்​தினம் எவர்​சில்​வர் பாத்​திரங்​களை பரி​சாக வழங்​கிய​தாகக் கூறப்​படு​கிறது.

அப்​போது, அந்த பகு​தி​யைச் சேர்ந்த ஆட்டோ ஓட்​டுநர் பிர​சாந்த் மனைவி சிந்​துஜா (25) என்​பவர் தனக்​கும் பரிசுப் பொருள் கொடுக்​கும்​படி கேட்​டுள்​ளார்.

இதில் வாக்​கு​வாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தகராறு முற்றி அந்​தப் இளம் பெண்ணை பரிசுப் பொருட்​கள் விநி​யோகித்த திமுக​வினர் சிலர் ஆபாச​மாக திட்​டி, தாக்​கிய​தாகக்கூறப்​படு​கிறது.

இதில் மனமுடைந்த அப்​பெண் நடந்த விவரங்​களை அன்று இரவு கணவர் பிர​சாந்​திடம் கூறி உள்​ளார். தொடர்ந்து மன உளைச்​சலில் இருந்த சிந்​துஜா, வீட்டை உள்​பக்​க​மாக தாழிட்​டுக் கொண்டு சேலை​யால் தூக்​குப் போட்​டுள்​ளார்.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த கணவர், வீட்​டின்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்​று,மனை​வியை அக்​கம் பக்​கத்​தினர் உதவி​யுடன் மீட்டு தனி​யார் மருத்​து​வமனைக்கு ஆம்​புலன்ஸ் மூலம் அழைத்​துச் சென்​றார். ஆனால் அவர் செல்​லும் வழி​யிலேயே இறந்​தார்.

இதனிடையே, அவரை தற்​கொலைக்கு தூண்​டிய​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி சிந்​துஜா​வின் உறவினர்​கள், திருச்​சி-சேலம் சாலை​யில் உத்​தமர் ​கோ​வில் மேம்​பாலத்​தில் நேற்று மறியலில் ஈடு​பட்​டனர்.

தகவலறிந்து வந்த கொள்​ளிடம் போலீ​ஸார், அவர்​களிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தி, உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என தெரி​வித்​ததைத் தொடர்ந்து மறியலை கைவிட்​டனர். பின்​னர் அவர்​கள் கொள்​ளிடம் காவல் நிலை​யத்தை முற்​றுகை​யிட்​டனர்.

இதுதொடர்​பாக சிந்​துஜா​வின் தாயார் இளை​ய​ராணி அளித்த புகாரின்​பேரில், தற்​கொலைக்குதூண்​டியது, பெண் வன்கொடுமை தடுப்​புச் சட்​டம் உள்​ளிட்ட 7 பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​து, ராஜா, திமுக கிளைச் செய​லா​ளர் ராஜேந்​திரன், ரவிக்​கு​மார், ராஜா மனைவி புஷ்பம், ராஜேந்​திரன் மனைவி ராஜேஸ்​வரி, ராஜ்கு​மாரின் தாய் அங்​குமணி ஆகிய 6 பேரை கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்​.

மேலும் தலைமறைவாக உள்ள திமுக நிர்​வாகிகள் சுரேஷ்கு​மார், ராஜ்கு​மார், ரவி மனைவிகார்த்​திகா ஆகியோரை போலீஸார் தேடி வரு​கின்​றனர். உயி​ரிழந்த சிந்துஜாவின் தாயாரை அதி​முக திருச்சி புறநகர் கிழக்கு மாவட்​டச் செய​லா​ளர் மு.பரஞ்ஜோதி சந்​தித்து ஆறுதல் கூறி​னார்.

தற்கொலை விவகாரத்தில் தலை​வர்​கள் கண்​டனம்

சென்னை: மணச்சநல்லூர் தொகுதியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திமுகவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: திமுக​வினர் ஆபாச​மாகப் பேசி தாக்​கிய​தில் மனமுடைந்த பட்​டியலினப் பெண் ஒரு​வர் தூக்​கிட்​டுத் தற்​கொலை செய்து கொண்ட தகவல் அதிர்ச்​சி​யளிக்​கிறது.

தேர்தல் நேரத்தில் விதிமுறைகளை மீறி, கூப்பன் போன்றவற்றைக் கொடுத்து மக்களை ஏமாற்றுவதே மிகத் தவறானது. இதில் அதைக் கொடுக்கும் அகங்காரத்தில், பெண்களை இழிவுபடுத்தி தற்கொலை வரை தூண்டியிருப்பது மிகவும் கொடூரமானது.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி.​தினகரன்: சட்​ட​விரோத​மாகப் பரிசுப் பொருட்​களை விநி​யோகம் செய்​ததோடு, பெண் ஒரு​வரைத் தரக்​குறை​வாகப் பேசி அவரை தற்​கொலை செய்​யத் தூண்​டிய திமுக வேட்​பாளர் கதிர​வனின் செயல்​பாடு கடும் கண்​டனத்​துக்​குரியது.

பாமக தலை​வர் அன்​புமணி: சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடையப்போவது உறுதி என்பதை அறிந்து கொண்ட திமுக, மோசடி செய்தாவது ஆட்சியைத் தக்கவைக்க துடித்துக் கொண்டிருக்கிறது.

திருச்​சி​யில் பட்டியலின பெண்ணை திட்​டி​யும், தாக்கி​யும் தற்​கொலை செய்து கொள்ள வைத்​திருக்​கிறது திமுக. கொடிய பாம்பைவிட திமுக மிக​வும் தீமை​யானது என்​ப​தற்கு இதுவே சான்று.

தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை: மக்களை ஏமாற்​றிக் கொண்​டிருக்​கும் திமுக​வினர், பெண் ஒரு​வர் மீது தாக்​குதல் நடத்​தி​யிருக்​கிறார்​கள். இவர்​கள் அனை​வரை​யும் உடனடி​யாகக் கைது செய்ய வேண்​டும்.

தவெக தலை​வர் விஜய்: திமுக​வினரின் ஆபாச வசவு​களைத் தாங்க இயலாமல், மன உளைச்​சலால் சகோ​தரி ஒரு​வர் தன்​னுடைய உயிரை மாய்த்​துக்​கொண்​டார் என்​கிற செய்தி உங்​கள் மனசாட்​சியை உலுக்​க​வில்​லையா ஸ்டா​லின் சார். இந்​தக் கொடூரச் செயலுக்​குக் காரண​மான கயவர்​கள் உடனடி​யாகக் கைது செய்​யப்பட வேண்​டும்.

<div class="paragraphs"><p>உத்​தமர்​கோ​விலில்​ திருச்​சி-சேலம்​ சாலை​யில்​ மறியலில்​ ஈடு​பட்​ட சிந்​துஜா​வின்​ உறவினர்​கள். (உள்படம்)&nbsp;சிந்​துஜா</p></div>
நாட்டிலேயே பயணிகள் சேவை, வருவாயில் தெற்கு ரயில்வே முதலிடம் பிடித்து சாதனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in