

கிருஷ்ணகிரி வங்கி கொள்ளையில் நகையை இழந்த வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் முகாம் நேற்று தொடங்கியது. முதல் நாளில் 140 பேருக்கு ரூ.2.50 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே குந்தாரப் பள்ளி ராமாபுரம் பேங்க் ஆஃப் பரோடா வங்கி கிளையில் கடந்த ஜனவரி 23-ம் தேதி நள்ளிரவில் புகுந்த மர்ம கும்பல் ரூ.12 கோடி மதிப்புள்ள 6,038 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
குற்றவாளிகளைப் பிடிக்க எஸ்பி கண்ணம்மாள் தலைமையில் 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷாநவாஸ்(49), அப்ரர்(27), ஷேக்அலிகான்(53), சாதிக் அலிகான்(32), பஹீம் (எ) பாடா(29), சூப்கான்(எ)லம்பு(29), அசார் அலி(36) ஆகிய 7 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் சொத்துகளை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைக்கான இழப்பீடை வழங்க வங்கி நிர் வாகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர் பாக நகைகளை இழந்த வாடிக்கை யாளர்களுக்கு கடிதம் மூலம் தெரி விக்கப்பட்டது. இழப்பீடு வழங்க 5 நாட்கள் முகாம் நடைபெறும் எனவும், நகைகளுக்கான மதிப்பில் நகைக்கடன் நிலுவைத் தொகை போக மீதி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று குந்தாரப் பள்ளி இணைப்பு சாலையில் உள்ள பாண்டி யன் மஹால் திருமண மண்டபத்தில் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு தொகை கணக்கிட்டு வழங்கும் முகாம் நடந்தது. வங்கியின் கோவை மண்டல உதவி பொது மேலாளர் கருணாநிதி தலைமையில் வங்கி மேலாளர்கள் கோபால்ரத்தினம், விஜீயூ மற்றும் 12 அலுவலர்கள், 10 நகை மதிப்பீட்டாளர்கள் வாடிக்கையாளர்களின் நகைகளை கணக்கீடு செய்தனர்.
சேமிப்பு கணக்கில் வரவு
வாடிக்கையாளர் அடகு வைத்துள்ள நகையின் எடை, இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பு, நகையின் மொத்த மதிப்பு கணக்கிடப்பட்டது. மேலும், வாங்கிய கடன் தொகை, வட்டி (வங்கி கொள்ளை சம்பவத்துக்கு முந்தைய நாள் வரை) போக, அந்த நகைக்குரிய செய்கூலி, சேதாரத்தை சேர்த்து வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இதுகுறித்து மண்டல உதவி பொது மேலாளர் கருணாநிதி கூறும்போது, இம்முகாம் வருகிற 20-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். இதில் சுமார் 600 வாடிக்கையாளர்களின் 954 கணக்குகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது. முதல் நாளில் 140 வாடிக்கையாளர்களுக்கு சுமார் ரூ.2.50 கோடி வழங்கப்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்களின் நலனில் முக்கியத்தும் அளித்து, காப்பீடு தொகை வருவதற்கு முன்பே இழப்பீடு வழங்கப்படு கிறது. அனைத்து வாடிக்கையாளர் களுக்கும் கடிதம் மூலம் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உரிய நாள், நேரத் தில் முகாமில் பங்கேற்கலாம் என்றார்.
முகாம் நடைபெற்ற பகுதியில் போலீ ஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.