Published : 16 Oct 2015 07:54 AM
Last Updated : 16 Oct 2015 07:54 AM

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மேற்கொண்டுள்ள கூட்டுப் பயிற்சி எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல: 3 நாடுகளின் கப்பற்படை அதிகாரிகள் அறிவிப்பு

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 3 நாடுகளின் கடற்படைகள் மேற்கொண்டுள்ள கூட்டுப் பயிற்சி எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என அந்நாடுகளின் கப்பற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய 3 நாடுகளின் கடற் படைகள் இணைந்து ஆண்டு தோறும் கூட்டு போர்ப் பயிற்சி மேற் கொண்டு வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான பயிற்சி, வங்காள விரிகுடா கடல் பகுதியில் நேற்று தொடங்கியது. 19-ம் தேதி வரை நடக்கும் இந்தப் பயிற்சிக்கு ‘மலபார்-15’ என பெயரிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் இந்திய கடற் படை சார்பில் ஐஎன்எஸ் - சிவாலிக், ரன் விஜய், பெட்வா, சக்தி ஆகிய போர்க் கப்பல்களும், ஐஎன்எஸ் சிந்துத்வாஜ், சிந்துகோஷ் ஆகிய நீர்மூழ்கிக் கப்பல்களும், ‘பி8ஐ’ என்ற விமானமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

‘ஐஎன்எஸ் சிவாலிக்’ போர்க் கப்பலில் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்திய கப்பற்படை அதிகாரி பி.கே.வர்மா, எஸ்.வி.போகாரே, அமெரிக்க கப்பற்படை அதிகாரிகள் அகாய்ன், வில்லியம் மற்றும் ஜப்பான் கப்பற்படை அதிகாரி முரக்காவா, ஹோஷினோ ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடந்த 1992-ம் ஆண்டு இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து இந்த கூட்டுப் பயிற் சியை தொடங்கின. இதில் 2007-ம் ஆண்டு முதல் ஜப்பானும் இணைந்து கொண்டது. 19-வது ஆண்டாக இப்பயிற்சி மேற்கொள் ளப்படுகிறது. வரும் 19-ம் தேதி வரை மொத்தம் 6 நாட்கள் வங்காள விரிகுடா கடல் பகுதியில் பயிற்சி மேற்கொள்ளப்படும். இதில் 2 நாட்கள் கரையிலும், 4 நாட்கள் கடலிலும் பயிற்சி நடைபெறும்.

3 நாடுகளும் ராணுவ தொழில் நுட்பம் மற்றும் போர் உத்திகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள இப் பயிற்சி வழி வகுக்கும். சீனா வுக்கு எதிராக இந்தப் பயிற்சி நடத்தப்படுவதாக கூறுவது தவ றான கருத்து. இக்கூட்டுப் பயிற்சி எந்த நாடுகளுக்கும் எதிரானது அல்ல.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x