Published : 08 Oct 2015 08:54 AM
Last Updated : 08 Oct 2015 08:54 AM

ஊதியத்தில் 75 சதவீதத்தை பென்ஷனாக வழங்க கோரி பொதுநல வழக்கு தொடரப் போவதாக ஓய்வுபெற்ற ஜவான்கள் அமைப்பு அறிவிப்பு

ஓய்வுபெறும் ராணுவ ஜவான்களுக்கு ஊதியத்தில் 75 சதவீதத்தை பென்ஷனாக வழங்கக் கோரி பொதுநல வழக்குத் தொடரப் போவதாக ‘வாய்ஸ் ஆஃப் எக்ஸ் சர்வீஸ்மேன் சொஸைட்டி’ அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவர் எஸ்.வரதராஜன் கூறியதாவது: எங்களது பிரச்சினைகள் குறித்துப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரை சந்தித்து, எங்களது அமைப்பின் பொதுச் செயலாளர் பீர் பகதூர் சிங், பொருளாளர் நளின் தல்வார் சட்ட ஆலோசகர் அசோக் சேத்தன் உள்ளிட்டவர்கள் எங்களது கோரிக் கைகளை விளக்கினார்கள்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வூதியம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு, ‘இது தொடர்பாக இப்போது உள்ள காலமுறையை ஏற்றுக்கொள்வ தாக ராணுவம் எழுத்துபூர்வமாக கடிதம் கொடுத்து விட்டதால் இதில் மாற்றம் செய்ய முடியாது’ என்று அமைச்சர் கூறினார்.

அதிகாரிகளுக்கு வழங்கப்படு வதுபோல் ’மிலிட்டரி சர்வீஸ் அலவன்ஸ் பே’ ஜவான்களுக்கும் வழங்கப்பட வேண்டும், ஜவான் களுக்கு ஊதியத்தில் 75 சதவீதம் பென்ஷனாக வழங்கப்பட வேண்டும் என்ற எங்களின் கோரிக்கைகள் 7-வது ஊதிய குழுவில் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், மற்ற கோரிக்கைகளைப் பற்றி இன்னொரு சந்திப்பில் விரிவாக பேசலாம் என்று உறுதியளித்தார்.

6-வது ஊதியக் குழு அட்ட வணையில் இந்தக் கோரிக்கைகள் சேர்க்கப்பட்டால் மட்டுமே, ஓய்வு பெற்ற ஜவான்கள் பலன் அடைய முடியும்.

எனவே, எங்களது இந் தக் கோரிக்கைகளைப் பரிசீலிக்கக் கோரி நீதிமன்றத்தில் விரைவில் பொது நல வழக்குத் தொடர இருக்கிறோம்.

இவ்வாறு வரதராஜன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x