Published : 16 Oct 2015 07:38 AM
Last Updated : 16 Oct 2015 07:38 AM

புதுச்சேரியில் 5 கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டு இயக்கம் தொடக்கம்: தேர்தலில் இணைந்து போட்டியிட திட்டம்

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, ஆர்எஸ்பி ஆகிய 5 கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கத்தை புதுச்சேரியில் தொடங்கி உள்ளன. தேர்தலில் இணைந்து போட்டியிட உள்ளதாக வும் 15 நாட்களில் செயல்திட்டத்தை வெளியிடுவதாகவும் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தைப் போல புதுச்சேரி யிலும் மக்கள் நல கூட்டு இயக்கம் தொடங்கியுள்ளோம். ஏற்கெனவே, கூட்டு போராட்ட இயக்கத்தின் மூலம் 106 இடங்களில் கூட்டாக மக்கள் பிரச்சார இயக்கங்களை நடத்தினோம். தற்போது தொடங் கப்பட்டுள்ள இயக்கத்தில் இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, ஆர்எஸ்பி ஆகிய கட்சிகள் உள்ளன. முதல் கட்டமாக கட்சிகளின் ஊழியர் சந்திப்பு கூட்டம் நடத்த உள்ளோம். 15 நாட்களில் மக்கள் நல கூட்டு இயக்கத்தின் செயல்திட்டத்தை வெளியிடுவோம்.

அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக மற்றும் என்.ஆர்.காங்கி ரஸ் கட்சிகள் மீது ஊழல் குற்றச் சாட்டுகள் உள்ளன. நேர்மையான மாற்று அரசை புதுச்சேரி மக்கள் விரும்புகின்றனர். புதுச்சேரியில் 2 செயலகங்களாக தலைமைச் செயலகம், சட்டப்பேரவை செய லகம் ஆகியவை உள்ளன. சட்டப் பேரவை செயலகம் தன்னிச்சையாக செயல்பட வேண்டும். சட்டப்பேர வைக்கு ஜனநாயகத்தை மீட்டு எடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

புதிய இயக்கத்தால் மாற்றத்தை புதுச்சேரியில் தர முடியும். புதிய இயக்கம் தொடங்கியது, அரசியல் அதிகாரம் வேண்டும் என்பதற்காகவே. புதிய கட்சிகள் வந்தால் இணைப்பது தொடர்பாக இணைந்து முடிவு எடுப்போம். புதுச்சேரியில் அமைச்சர்கள் பல வீனமாக இருப்பதே அதிகாரிகள் ஊழலில் ஈடுபட காரணம். வெளிப் படை தன்மை புதுச்சேரி அரசில் இல்லை. பதவிக்காக எதையும் செய்யலாம், கட்சி மாறலாம், கொள்கை மாறலாம் என்ற நிலை உள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தை எங்கள் கூட்டு இயக்கம் எதிர்க்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x