Published : 01 Oct 2015 08:34 AM
Last Updated : 01 Oct 2015 08:34 AM

தமிழ்மொழியின் சிறப்பை உலகமெல்லாம் அறியச் செய்த பெருமை திருக்குறளுக்கு உண்டு: தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் பெருமிதம்

தமிழ் மொழியின் சிறப்பை உலகமெல்லாம் அறியச் செய்த பெருமை திருக்குறளுக்கு உண்டு என்று உலக மொழிபெயர்ப்பு நாள் விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மூ.இராசாராம் தெரிவித்தார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் உலக மொழிபெயர்ப்பு நாள் விழா தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன கருத்தரங்க அரங்கில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், அரசு செயலாளர் மூ.இராசாராம் எழுதிய ‘தி குளோரி ஆஃப் திருக்குறள்’ எனும் ஆங்கில நூல் வெளியிடப்பட்டது. ஐஸ்லாந்து நாட்டின் மதிப்புறு தூதர் குமார் சீதாராமன் நூலை வெளியிட, மொழிபெயர்ப்புத் துறை முன்னாள் இயக்குநர் பாலசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மூ.இராசாராம் பேசியதாவது:

தமிழின் சிறந்த இலக்கி யங்கள் பிற மொழிகளில் மொழிபெயர்க் கப்பட வேண்டுமென்று தமிழக அரசு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தமிழ் மொழியின் சிறப்பை உலகெல்லாம் அறியச் செய்த பெருமைக்குரிய திருக்குறளை உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கும் பணி நடை பெற்று வருகிறது. திருக்குறளை கொரிய மொழியிலும், ஔவை யாரின் ஆத்திச்சூடியை அரபு மற்றும் சீன மொழியிலும் மொழி பெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஜெர்மன் சென்றிருந்தபோது, பெர்லின் நகரிலுள்ள புத்தகக் கடையில் ஜி.யு.போப் மொழி பெயர்த்த திருக்குறள் நூலைக் கண்டேன். திருக்குறளின் சிறப்பைப் பற்றி 365 அறிஞர் பெருமக்களின் கருத்துகள் தொகுக்கப்பட்டு இந்த ஆங்கில நூல் வெளிவந்துள்ளது. தற்போது பாரதிதாசனின் பாடல் களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில், மூத்த மொழி பெயர்ப்பாளர் அரிமா எம்.சீனிவாசன், திசை எட்டும் ஆசிரியர் குறிஞ்சிவேலன், ஊடகவிய லாளர் ராஜ்மோகன், இளஞ்சுடர் வி.சைதன்யா ஆகியோ ருக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்பட்டது.

விழாவில், தமிழ் வளர்ச்சி இயக்குநர் கா.மு.சேகர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக் குநர் கோ.விசயராகவன், மொழி பெயர்ப்புத் துறை இயக்குநர் ந.அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x