Published : 25 Oct 2015 10:43 AM
Last Updated : 25 Oct 2015 10:43 AM

ஓவியர் சங்கர், மதன், கேஷவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: சென்னையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது

மூத்த ஓவியர் சங்கர், கார்ட்டூனிஸ்ட்கள் மதன், கேஷவ் ஆகியோருக்கு சென்னையில் நடந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டது.

‘கார்ட்டூன் வாட்ச்’ மாத இதழ் கடந்த 13 ஆண்டுகளாக சிறந்த கார்ட்டூனிஸ்ட்களுக்கு விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. மூத்த ஓவியர் சங்கர், கார்ட்டூனிஸ்ட்கள் மதன், கேஷவ் ஆகியோருக்கு வாழ் நாள் சாதனையாளர் விருதை ‘இந்து’ என்.ராம் வழங்கினார்.

மூத்த ஓவியரான சங்கர் (92), கடந்த 70 ஆண்டுகளாக ஓவியங் களை வரைந்து வருகிறார். 1952 முதல் சந்தமாமா பத்திரிகை யில் படங்கள் வரைந்து பிரபலமானவர். தற்போது ‘ராமகிருஷ்ண விஜயம்’ மாத இதழில் வரைந்து வருகிறார். கார்ட்டூனிஸ்ட் மதன், 40 ஆண்டுகளாக விகடன் குழுமத் தில் பணியாற்றி வந்தவர். கார்ட்டூனிஸ்ட்டாக மட்டுமல் லாமல் எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் இருந்து வருபவர்.

வங்கிப் பணியாளராக இருந்த கேசவன், பின்னர் கேஷவ் என்ற பெயரில் கார்ட்டூன்கள் வரையத் தொடங்கினார். ‘தி இந்து’வில் 1987-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவரது அரசியல் கார்ட்டூன்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

‘கார்ட்டூன் வாட்ச்’ இதழின் ஆசிரியர் த்ரயம்பக் ஷர்மா கூறும்போது, "மூத்த கார்ட்டூ னிஸ்ட் ஆர்.கே.ல‌ஷ்மணின் பிறந்த நாளான இன்று இந் நிகழ்ச்சி நடைபெறுவது சிறப் பாகும். கார்ட்டூன் வாட்ச் வழங் கிய முதல் வாழ்நாள் சாதனை யாளர் விருது அவருக்குதான் வழங்கப்பட்டது’’ என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ‘இந்து’ என்.ராம் கூறும்போது, ‘‘கார்ட்டூன் என் பதற்கு தமிழில் கேலிச் சித்திரம் என்று கூறப்படுகிறது. அது சரியான வார்த்தையாக இருக்க முடியாது. வேறொரு வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும். 1987-ல் ஆனந்த விகடனில் வெளிவந்த கார்ட் டூன் சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பை உருவாக் கியது. நாளிதழ்களில் கார்ட்டூன் களுக்கான இடம் குறைந்து வருவதாக பல கார்ட்டூனிஸ்ட்கள் தெரிவிக்கின்றனர். இதழாசிரி யர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நேரத்தில் கார்ட்டூன் வரையும் முறைகளும் மாறி வருகின்றன என்பதை மறுக்க முடியாது. கார்ட்டூன் கலை நலிந்து வருகிறது. அதை அனுமதிக்கக் கூடாது’’ என்றார்.

கார்ட்டூன் திருவிழா

மூத்த ஓவியர் சங்கர் பேசும் போது, ‘‘பல ஆண்டுகளாக என்னை யாரும் கண்டுகொள் ளாதபோது இப்படியொரு கவுர வம் கிடைத்திருப்பது மிகவும் சந் தோஷமாக இருக்கிறது’’ என்றார்.

மதன் பேசும்போது, ‘‘தமிழகத் தில் கார்ட்டூனிஸ்ட்களுக்கான அங்கீகாரம் குறைவாக உள்ளது. ‘தி இந்து’ போன்ற பெரிய நிறுவனங்கள் அனைத்து கார்ட்டூனிஸ்ட்களை ஒருங் கிணைக்கும் வகையில் கார்ட் டூன் திருவிழா நடத்தலாம்’’ என கூறினார்.

கேஷவ் பேசும்போது, ‘‘கடந்த 28 ஆண்டுகளாக ‘தி இந்து’வில் பணியாற்றி வருகிறேன். இதற்கு அவர்கள் கொடுத்த ஊக்கம் தான் காரணம்’’ என்றார். ‘ப்ரீ சென்ஸ்’ இதழின் ஆசிரியர் ப்ரைம் பாயின்ட் னிவாசன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x