Published : 07 Sep 2015 10:45 AM
Last Updated : 07 Sep 2015 10:45 AM

பெரியாறு அணையின் நீர்மட்டம் 118 அடிக்கு கீழ் சரிவு: மூவர் குழு கூட்டம் நடைபெறுவதில் சிக்கல்

பெரியாறு அணையின் நீர்மட்டம் 118 அடிக்கு கீழ் சரிந்துள்ளதால் 5 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை எழும் அபாயம் உருவாகி உள்ளதோடு, மூவர்குழு கூட்டம் நடைபெறுவதிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

கேரளத்தில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை, இதனால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதற்கிடையில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடி நீர் மற்றும் பாசனத்துக்காக விநாடிக்கு 700 கனஅடி நீர் திறக் கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்குப் பின் நேற்று முன்தினம் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. ஆனால், பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை.

நேற்றைய நிலவரப்படி அணை யின் நீர்மட்டம் 117.70 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 495 கன அடியாகவும் இருந்தது. இதேநிலை நீடித்தால் விரைவில் 5 மாவட்டங் களிலும் குடிநீர் பிரச்சினை ஏற் படும் அபாயம் உள்ளது.

இதற் கிடையில், மூவர்குழு கூட்டம் இந்த மாதம் முதல் வாரத்தில் நடை பெற வாய்ப்புள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மூவர் குழுவின் தலைவரும், மத்திய நீர்வள ஆணையத் தின் தலைமைப் பொறியாளரு மான எல்.ஏ.வி. நாதன் அலுவலகத் தில் இருந்து தகவல் தெரிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நடை பெற்று வருவதால், மூவர் குழுவில் உள்ள தமிழக பிரதிநிதி மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்க முடி யாத நிலை உள்ளதாக உயர் அதிகாரிகள், மூவர் குழு தலைவர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, இம்மாத இறுதி யில் மூவர்குழு கூட்டம் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், மழையில்லாமல் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் இந்த மாதம் கூட்டம் நடைபெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து’விடம் பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, நீர்மட்டம் உயர்ந்திருந்தால் மட்டுமே மூவர் குழு கூட்டம் நடைபெறும். நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதால், கடந்த 2 மாதங்களாக நடைபெறாத மூவர் குழு கூட்டம், இந்த மாதமும் நடைபெற வாய்ப்பில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x