Published : 13 Oct 2020 07:15 PM
Last Updated : 13 Oct 2020 07:15 PM

ராமையன்பட்டி குப்பை கிடங்கில் எரிந்த தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது: நெல்லை மாநகராட்சி ஆணையர் தகவல்

கோப்புப் படம்

திருநெல்வேலி 

திருநெல்வேலி அருகே ராமையன்பட்டி குப்பை கிடங்கில் பற்றிய தீயை மண் கொண்டு பரப்பி கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாநகராட்சியில் திருநெல்வேலி, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பைகளை லாரி மூலம் எடுத்துச்சென்று மாநகராட்சிக்கு சொந்தமான ராமையன்பட்டி குப்பை கிடங்கில் மட்;கும் குப்பைகள், மட்காத குப்பைகள் என தனித்தனியாக பிரித்து கொட்டப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி குப்பை கிடங்கில் தீ பரவியது குறித்து தகவல் அறிந்தவுடன், உடனடியாக மாநகராட்சியின் மூலமாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து, புகைமண்டலமாக பரவிய தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், தீயணைப்புத் துறையினரால் கொண்டு வரப்பட்ட 2 தீயணைக்கும் வாகனங்களுக்கு மாநகராட்சி லாரிகள் மூலம் தொடர்ந்து தண்ணீர் வழங்கி உதவிய போதிலும், தீ பரவுவதைக் கட்டுக்குள் கொண்டு வருவது என்பது பெரும் சவாலாகவே இருந்தது.

இதையடுத்து மாநகராட்சியின் மூலமாக 20 டிப்பர் லாரிகள் உடனடியாக ஏற்பாடு செய்து, டிப்பர் லாரிகள் மூலமாக புகை மண்டலம் ஏற்படும் பகுதிகளில் தொடர்ந்து மண் கொட்டப்பட்டு, கொட்டிய மண்ணை 10 ஜேசிபி இயந்திரங்கள், 4 கிட்டாட்சி இயந்திரங்கள், 1 ஜெட்ராடு இயந்திரம் ஆகியவற்றின் மூலமாக மண் நிரவப்பட்டு தீ பரவுவது முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தற்போது காற்றின் அளவும் குறைந்துள்ளதாலும் மற்றும் மாநகராட்சியின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 20 டிப்பர் லாரிகள் மூலம் தொடர்ந்து மண் கொட்டப்பட்டு, கொட்டிய மண்ணை பரப்பி வருவதன் மூலமே புகை மண்டலம் முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x