Published : 11 Oct 2020 08:17 AM
Last Updated : 11 Oct 2020 08:17 AM

ரூ.3.5 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை அறநிலையத் துறையிடம் ஒப்படைத்த விவசாயி

பொள்ளாச்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடி கிராமத்தில் பாளையப்பட்டு ஜம்பு நாயக்கர் காலத்தில் வரதராஜப் பெருமாள் கோயில், மாரியம்மன் கோயில், மாலப்பட்டி பெருமாள் கோயில், அரண்மனை விநாயகர் கோயில், சிறுதுண்டி அம்மன் கோயில்கள் கட்டப்பட்டன. இந்தகோயில்களுக்கு 154 ஏக்கர் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன.

இந்த கோயில் நிலங்கள் சிஞ்சுவாடி, கோலார்பட்டி, தென்குமாரபாளையத்தில் ஆக்கிரமிப்பில் உள்ளதாக புகார் கூறப்படுகிறது.

இந்நிலையில், குண்டலப்பட்டியில் உள்ள சிஞ்சுவாடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான, 12.16 ஏக்கர் விவசாய நிலத்தை, அனுபவ பாத்தியத்தில் வைத்திருந்த லட்சுமாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (43)என்பவர் சிஞ்சுவாடி ஊராட்சி தலைவர் ஜெயக்குமார் முன்னிலையில், கோயில் செயல் அலுவலர் விமலா,அறநிலையத் துறை பொள்ளாச்சி சரக ஆய்வாளர் மல்லிகா ஆகியோரிடம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘அந்த நிலத்தின் மதிப்பு குறைந்தபட்சம் ரூ.3.5 கோடி இருக்கும்” என்றனர். ராஜேஷ் கூறும்போது, “எனது குடும்பம் மற்றும் தொழிலில் பாதிப்புகள் ஏற்பட்டதால், கேரளாவில் பிரசன்னம் பார்த்ததில், கோயில் நிலத்தை திரும்பஒப்படைக்க வேண்டும் என தெரியவந்தது. இந்த நிலம், 100 ஆண்டுக்குமேலாக எனது முன்னோரின்அனுபவ பாத்தியத்தில் இருந்தது. மூலப்பத்திரம் மூலம் இது கோயிலுக்கு சொந்தம் என தெரிந்தது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x