Last Updated : 26 Sep, 2015 08:34 AM

 

Published : 26 Sep 2015 08:34 AM
Last Updated : 26 Sep 2015 08:34 AM

தமிழகம், புதுச்சேரி நீதிமன்ற வளாகங்களில் போராட்டம், போஸ்டர்கள் ஒட்டத் தடை: ஆட்கள் வந்து செல்லவும் கடும் கட்டுப்பாடு

தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களி லும் போராட்டம் நடத்தவும், போஸ்டர்கள் ஒட்டவும் தடை விதிக் கப்பட்டுள்ளது.

கட்டாயம் ஹெல்மெட் உத்த ரவை எதிர்த்தும் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க கோரியும் மதுரை வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மதுரையில் வழக்கறிஞர்கள் வாக னப் பேரணி உள்ளிட்ட போராட் டங்களில் ஈடுபட்டனர். இந்தபிரச் சினையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த சம்பவங்களால் மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்துக்கான அங்கீகாரத்தை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் ரத்து செய்தார். வழக்கறிஞர்கள் சங்க வளாகத்தில் உள்ள உடை மைகளை எடுத்துக்கொண்டு இடத்தை காலிசெய்யுமாறு நேற்று முன்தினம் சங்க கட்டிடத்தில் நோட்டீஸ் ஓட்டப்பட்டது. உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் சங்கத்துக்கும் எச்சரிக்கை நோட் டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த பரபரப்பான சூழலில் மது ரையைச் சேர்ந்த 14 வழக்கறிஞர் களை பணி இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் விளக்கம் பெறாமல் இந்த உத்தரவு பிறப்பித் திருப்பதாகவும், இதை சட்டப்படி சந்திப்பதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகம், புதுச் சேரியில் உள்ள அனைத்து நீதிமன் றங்களிலும் போராட்டங்கள் நடத்த வும், நோட்டீஸ் ஒட்டவும் தடை விதித்து உயர் நீதிமன்ற பதிவுத் துறை நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நகல் அனைத்து நீதிமன்றங்களிலும் நேற்று ஒட்டப் பட்டன. அதன்படி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களின் உள், வெளிப்பகுதி மற்றும் நீதிமன்ற வளாகங்களின் சுற்றுப்புறங்களில் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கட் அவுட்டுகள், போஸ்டர்கள் ஒட்டவும், நோட்டீஸ்கள் விநியோ கிக்கவும், தர்ணா, பேரணி, கூட் டங்கள் நடத்தவும் தடை விதிக் கப்படுகிறது.

நீதிமன்ற வளாகத்தில் காலை 8.30 மணிக்கு முன்பும், மாலை 7 மணிக்கு பின்பும் எக்கார ணம் கொண்டும் ஆட்கள் நுழைய வும் தடை விதிக்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x