Published : 09 Oct 2020 07:47 AM
Last Updated : 09 Oct 2020 07:47 AM

சசிகலாவின் சொத்துகள் முடக்கம்: ஜெ.தீபக், ஜெ.தீபாவுக்கு நோட்டீஸ்

சசிகலாவின் பினாமி சொத்துகள் முடக்கப்பட்டது தொடர்பாக ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமானவரித் துறை கடந்த 2017-ம் ஆண்டு சோதனை நடத்தியது. அந்த சோதனையிலும், அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையிலும் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் பினாமிகள் கண்டறியப்பட்டு, அவர்களின் சொத்துகளை வருமானவரித் துறை முடக்கி வருகிறது.

முதல்கட்டமாக சென்னை, கோவை, புதுச்சேரியில் உள்ள ரூ.1,600 கோடி மதிப்புள்ள 9 சொத்துகள் முடக்கப்பட்டன. 2-வது கட்டமாக போயஸ் தோட்டம், தாம்பரம், சேலையூர், பெரும்புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள ரூ.300 கோடி சொத்துகளை வருமானவரித் துறை முடக்கியது. 3-வது கட்டமாக கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா என ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமானவரித் துறை அதிகாரிகள் முடக்கி நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். 1991-1995-ம் ஆண்டுகளுக்குள் வாங்கப்பட்ட இந்த சொத்துகள் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் சட்டரீதியிலான வாரிசு என்பதால், அவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x