Published : 06 Oct 2020 11:05 AM
Last Updated : 06 Oct 2020 11:05 AM

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கரோனா தொற்றாளர்களை கண்காணிக்க நவீன கருவி

கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 15 நவீன தொலை கண்காணிப்பு கருவி நிறுவப்பட்டுள்ளது.

இக்கருவி மூலம் கரோனா தொற்றாளர்களின் இதயத் துடிப்பு அலை, இதயத் துடிப்பு விகிதம், சுவாச விகிதம், ஆக்சிஜன் செறிவு மற்றும் உடல் வெப்பநிலை ஆகியவற்றை சற்று தொலைவில் இருந்தபடி கண்காணிக்கலாம். இதுகுறித்து ஆட்சியர் கடலூர் ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி கூறுகையில், “இந்த நவீன தொலைகண்காணிப்பு கருவி கட்டுப்பாட்டு அறையில் நிறுவப்பட்டுள்ள கணினி திரையுடன் இணைக்கப் பட்டிருக்கும்.

கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே மருத்துவக் குழுவினர் இக்கருவி மூலம் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை தொடர்ந்து கண்காணிக்க முடியும்.கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுசிகிச்சை பெற்று வருபவர்கள் அருகில் செல்லாமல் இக்கருவி மூலம் நோயாளிகளின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து மருத்துவக் குழு வினரால் உடனுக்குடன் சிகிச்சைஅளிக்க முடியும். இத்தகைய நவீன தொழில்நுட்ப கருவியின்பயன்பாட்டால் நோயாளிகளுக்கு தொந்தரவின்றி சிகிச்சையளிப்ப துடன், மருத்துவ குழுவினரும் நோய் தொற்றுக்கு ஆளாகாமல் அவர்களது உடல் நலனும் காக்கப்படும்’‘ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x