Published : 05 Oct 2020 07:37 AM
Last Updated : 05 Oct 2020 07:37 AM

குன்றத்தூர், வண்டலூர், பல்லாவரத்தில் மழை அளவை அறிந்துகொள்ள மழைமானி அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

மழைமானி வசதியற்ற வண்டலூர், குன்றத்தூர் பகுதிகளில் மழையளவை துல்லியமாக தெரிந்துகொள்ளும் வகையில் மழைமானிஅமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சி, செங்கை மாவட்டத்தில்,குன்றத்தூர், வண்டலூர், பல்லாவரம் ஆகிய வட்டங்கள் தவிர மற்ற அனைத்து வட்டங்களிலும் மழைமானி வைத்து மழை அளவீடு செய்யப்படுகிறது. இதனால், மாவட்டத்தில் துல்லியமான மழையளவு பதிவுசெய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக வருவாய்த் துறை சார்பில், அந்தந்த தாலுகா அலுவலகங்களில் மழைமானி நிறுவப்படும். எனவே வண்டலூர், குன்றத்தூர் அலுவலக வளாகத்தில்,விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்குபயனுள்ளதாக இருக்கும் வகையில் மழைமானி நிறுவ மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மழையளவு வட்டார வாரியாக பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், வண்டலூர், குன்றத்தூர், பல்லாவரம் வட்டாட்சியரகத்தில் இதுவரை மழைமானி கருவிகள் அமைக்கப்படவில்லை. இதனால், இப்பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்தாலும் மழையில்லை என்றே பதியப்படுகிறது.

இதனால், இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மழை அளவைக்கொண்டு, அதற்கேற்றவாறு சாகுபடி உள்ளிட்ட இதர பணிகளை செய்ய முடியாத நிலையில் உள்ளனர். எனவே, வட்டாட்சியர் அலுவலகங்களில் மழைமானி வைத்து, மழை அளவை கணக்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இப்பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்தாலும் மழையில்லை என்றே பதியப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x