Published : 30 Sep 2020 07:45 AM
Last Updated : 30 Sep 2020 07:45 AM

திரையரங்குகளை விரைவில் திறப்பது குறித்து முதல்வரிடம் வலியுறுத்துவேன்: அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதி

தமிழகத்தில் திரையரங்குகளை விரைவில் திறப்பது குறித்து முதல்வர் பழனிசாமியிடம் வலியுறுத்துவேன் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

தமிழகத்தில் அரசின் களப்பணிகள் காரணமாக கரோனா தொற்று குறைந்துள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது 75 பேரை பயன்படுத்தி, அரசு வழிமுறைகளுடன் திரைப்பட படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சின்னத் திரைக்கும் 60 பேரை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. திரைப்பட தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் 40 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், திரையரங்கு உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில்தமிழக திரையரங்கு உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றனர். இதுபற்றி மத்திய அரசுக்கு தெரிவித்துதமிழக திரையரங்கு உரிமையாளர்கள் பங்கேற்க முதல்வர் ஏற்பாடு செய்தார்.

திரையரங்குகளை திறப்பது குறித்த முழுமையான வழிகாட்டுதல்கள் மத்திய அரசிடம் இருந்துவரவில்லை. மேற்கு வங்கத்தில்அக்.1-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ஆனால், தமிழகத்தில் மருத்துவ குழுவின்ஆலோசனைகளின் படி அக்.31வரை திரையரங்குகள் திறக்கப்படாது என்று முதல்வர் அறிவித் துள்ளார்.

இதற்கிடையே இன்று காலை திரையரங்கு உரிமையாளர்கள் என்னை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை முதல்வரிடம் தெரிவிப்பதாக கூறியுள்ளேன்.

வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்களில் பொதுமக்கள் விரைவில் கலைந்து விடுவார்கள். ஆனால், திரையரங்கத்தில் 3 மணி நேரம் அமர்ந்து பார்க்கஅனுமதி வேண்டும். இருப்பினும் பல்வேறு வழிகாட்டுதல்களுடன் திரையரங்குகளை விரைவில் திறப்பதற்கு முதல்வரை வலியுறுத்துவேன்.

இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x