Published : 19 Sep 2015 09:01 AM
Last Updated : 19 Sep 2015 09:01 AM

கூட்டணி ஏற்படாமல் தடுக்க எதிர்க்கட்சிகளை பிரிக்க முயற்சி: திமுக தலைவர் கருணாநிதி குற்றச்சாட்டு

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி ஏற்படாமல் தடுக்க எதிர்க்கட்சிகளை பிரித்தாளும் முயற்சியில் சிலர் ஈடுபட்டிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. அதில் மாற்றம் ஏற்படாவிட்டால் தமிழகத் தின் தலைவிதியே மாற்றப்பட்டு விடும். தமிழகத்தின் பெய ரையே அம்மா நாடு என மாற்றிவிடுவார்கள். தமிழகத்தில் ஜனநாயகம் இருப்பதாகவே தெரியவில்லை. சட்டப்பேரவையில் அரசை விமர்சித்துப் பேச வாய்ப்பு தரப்படுவதில்லை. பேரவைக் கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான தேமுதிக உறுப் பினர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. மதுவிலக்கு பற்றி ஆளுங்கட்சியினர் வாயே திறப்பதில்லை.

பேரவை நடக்கும்போது முக்கிய அறிவிப்புகளை பேரவையில் அறிவிப்பதுதான் வழக்கம். ஆனால், முக்கிய அறிவிப்புகளை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் அறிவிக்கிறார். அமைச் சர்களின் துறை சார்ந்த அறிவிப்பு களையும் முதல்வரே அறிவிக்கிறார்.

தொழில் முதலீட்டில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார். ஆனால், இந்தியாவில் தொழில் தொடங்க சிறந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 12-வது இடத்தில் இருப்பதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

வரும் தேர்தலில் எதிர்க்கட்சி களிடம் ஒற்றுமை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சியிலும் உள்ள ஒருசில முக்கியமானவர்களை தங்கள் பக்கம் ஈர்த்து, அதன் மூலம் எதிர்க்கட்சிகளிடம் தேர் தல் உடன்பாடு ஏற்படாமல் இருக்க பிரித்தாளும் முயற்சி மேற்கொள்கிறார்கள்.

அண்ணா சொன்னபடி..

இந்நிலையில், பொதுத் தேர்தலை சந்திக்கும் திமுகவினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அண்ணா சொன்னபடி ஒவ்வொரு அடியையும் அளந்து எடுத்துவைக்க வேண்டும். திமுக தொண்டன் என்றால் சிங்கிள் டீயை குடித்துவிட்டு அல்லும்பகலும் அயராமல் பணியாற்றுவான் என பக்தவத்சலம் கூறுவார். அப்படிப்பட்ட தொண்டர்களாக திமுகவினர் மனமாற்றம் அடைய வேண்டும்.

தேர்தல் அறிக்கை தயாரிப்பதற் காக குழு அமைக்கப்பட்டு பணிகள் வேகமாக நடக்கின்றன. ‘நமக்கு நாமே’ பயணத்தை பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரும் 20-ம் தேதி தொடங்குகிறார். இப்பயணத்தை வெற்றிபெறச் செய்யவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு திமுக வினருக்கும் உண்டு.

இம்முறையும் தமிழர்கள் ஏமாந்துவிட்டால் தலைநிமிரவே முடியாது. இந்த முயற்சியில் தோற்றுவிட்டால் ஆப்பிரிக்க நீக்ரோக்கள், அமெரிக்க செவ்விந் தியர்களுக்கு ஏற்பட்ட கதிதான் தமிழர்களுக்கு ஏற்படும்.

பால் பொங்கும் நேரத்தில் குழந்தை அழுதாலும் தாய்மார்கள் எழுந்துசெல்ல மாட்டார்கள். வரு கிற மாதங்கள் பால் பொங்குகிற காலம். எல்லோரையும் நம் பக்கம் ஈர்க்க வேண்டும். மக்களுக்கு இப்போது உண்மை புரியத் தொடங்கியிருக்கிறது. புரிந்துகொண்ட மக்கள் நம்மை நோக்கி வேகமாக வந்து கொண் டிருக்கிறார்கள். திசைமாறிச் சென் றவர்கள் திமுகவே தமிழகத் தின் நம்பிக்கை என நம் பக்கம் அணிவகுக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த நேரத்தில் திமுக வினர் சோம்பியிருக்கக் கூடாது. கடமையில் இருந்து நழுவக்கூடாது. 2016 தேர்தலில் திமுகவுக்குதான் அதிக பொறுப்பு உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.

எதிரிகளின் பண பலம், சூழ்ச்சிகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. நமது லட்சியம் இந்த முறை வெற்றி பெற்றே தீரும். எனவே, வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையாக உறுதி யோடு ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x