Published : 07 Sep 2015 10:27 AM
Last Updated : 07 Sep 2015 10:27 AM

முதியோர், பெண்களுக்கு ரயில் பெட்டிகளில் லோயர் பெர்த் ஒதுக்கீடு 4 ஆக உயர்வு

விரைவு ரயில் பெட்டிகளில் முதியோர் மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்படும் லோயர் பெர்த் எண்ணிக்கை 4 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

இது தொடர்பாக ரயில்வே வாரியம் ரயில்வே மண்டலங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டி, ஏசி பெட்டிகளில் முதியோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், கர்ப்பிணிகளுக்கு என ஒவ்வொரு பெட்டிகளிலும் கீழ்பகுதி படுக்கைகள் (லோயர் பெர்த்) தலா 2 என ஒதுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இது முழுமையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை என்றும், முதியோர் மற்றும் பெண்களுக்கு ஒதுக்கப்படும் லோவர் பெர்த் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

எனவே, பயணிகளின் நலனைக் கருத்தில்கொண்டு தற்போது இருக்கும் லோயர் பெர்த் ஒதுக்கீடு எண்ணிக்கை 4 ஆக உயர்த்தப்படுகிறது. இதற்கான மென்பொருள் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, வரும் ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும்’’ என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x