Published : 25 Sep 2015 08:22 AM
Last Updated : 25 Sep 2015 08:22 AM

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 65 பைக்குகள்: முகநூலில் தகவல்கள் வெளியீடு

கோயம்பேடு பேருந்து நிலை யத்தில் கேட்பாரற்று கிடந்த 65 மோட்டார் சைக்கிள்களை போலீ ஸார் மீட்டு உரிமையாளர்களை கண்டுபிடித்து ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் தினமும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பொது மக்கள் பாதுகாப்பாக நிறுத்தி திரும்ப எடுத்து செல்கின்றனர். சில மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றை சொந்தம் கொண்டாடி யாரும் வரவில்லை. அதனை உரிய வர்களிடம் ஒப்படைக்க கோயம் பேடு காவல் உதவி ஆணையர் மோகன்ராஜ், ஆய்வாளர் தேவராஜ் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போலீஸார் நடத்திய சோதனை யில் 65 மோட்டார் சைக்கிள்கள் கேட்பாரற்று கிடப்பதை கண்டு பிடித்தனர். அவற்றை உரியவர் களிடம் ஒப்படைக்கும் முயற்சி நடந்து வருகிறது. இதன் முதல் கட்டமாக முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் 'மிஸ்சிங் டூ வீலர்' என்ற தலைப்பில் போலீஸார் புதிய பக்கத்தை தொடங்கியுள்ளனர். அதில் 65 மோட்டார் சைக்கிள் களின் புகைப்படங்களும் வெளி யிடப்பட்டுள்ளன.

இது தங்களது வாகனம்தான் என்பதற்கு முறையான ஆதாரங் களுடன் வருபவர்களிடம் அந்த மோட்டார் சைக்கிள் ஒப்படைக் கப்படும். மேலும் விவரங்களுக்கு 94981 33428, 94441 69996 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x