Published : 19 Sep 2020 07:54 AM
Last Updated : 19 Sep 2020 07:54 AM

பொது இடங்களில் கூட்டமாக கூடியது தொடர்பாக பாஜக மாநில தலைவர் முருகன் உட்பட 106 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு

பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாளை பாஜகவினர் நேற்று முன்தினம்உற்சாகமாக கொண்டாடினர். இதன் ஒரு பகுதியாக சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்துக்கு மாநிலதலைவர் எல்.முருகன், குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஊர்வலமாக வந்தார். பின்னர், கட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த 70 அடி நீள கேக்கை வெட்டினார்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றஎல்.முருகன், 70 அடி உயர கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றிவைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், பொது இடங்களில் அதிகமானோர் கூடியது தொடர்பாக மாம்பலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகரன், இதுகுறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, பாஜக மாநில தலைவர் முருகன், மாநில துணைத்தலைவர் எம்.என்.ராஜன், மாநிலபொதுச் செயலாளர் கரு. நாகராஜன் உள்ளிட்ட 106 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், பேரிடர்மேலாண்மைச் சட்டம், தொற்றுநோய் பரப்பும் வகையில் நடந்துகொள்ளுதல் உட்பட 5 பிரிவுகளின்கீழ் மாம்பலம் போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும், அனுமதியின்றி விளம்பர பேனர்கள்வைத்ததாக தனித் தனியாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x