Published : 14 Sep 2015 11:33 AM
Last Updated : 14 Sep 2015 11:33 AM

கிரானைட் முறைகேடு விவகாரத்தில் நரபலி விசாரணையை தடுக்க முயற்சி: இல.கணேசன் குற்றச்சாட்டு

‘கிரானைட் முறைகேடு விவகாரத்தில் நரபலி தொடர்பான விசாரணையை தடுக்க முயற்சி நடைபெறுவதாக’ பாஜக தேசிய குழு உறுப்பினர் இல. கணேசன் குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடியில் அவர் கூறும்போது, ‘ராணுவத்தினரின் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்பது 40 ஆண்டுகால கோரிக்கை. இதனை காங்கிரஸ் நிறைவேற்றவில்லை. தற்போது மோடி அரசு நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.

அரசின் திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. உரிய காலம் வரும்போது நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியே தீரும்.

ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாருவதற்கு பதிலாக மணலை மட்டும் அகற்றும் பணி நடக்கிறது. இதைக் கண்டித்து நல்லகண்ணு போராட்டம் நடத்திவருவது வரவேற்கத்தக்கது.

கிரானைட் முறைகேடு விவகாரத்தில் நரபலி கொடுத்தார்களா இல்லையா? என்பதை கண்டறிய சகாயம் தலைமையிலான குழுவினர் முயற்சி எடுக்கின்றனர். ஆனால் அதற்கு போலீஸார் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. நரபலி தொடர்பான விசாரணையை தடுக்க முயற்சி நடக்கிறது.

சிவகாசியில் பட்டாசு தொழிலை நம்பி பல்லாயிரம் குடும்பத்தினர் வாழ்கின்றனர் பொதுமக்கள் சீன பட்டாசுகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 2016 சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜக தயாராகிவிட்டது. தமிழகத்தில் அதிமுக, திமுக அல்லாத கூட்டணி அமையும்’ என்றார் அவர்.

பாஜக மாவட்ட தலைவர் கனகராஜ், செயலாளர் வீரமணி, செயற்குழு உறுப்பினர் சந்தனகுமார் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x