Last Updated : 18 Sep, 2015 08:56 AM

 

Published : 18 Sep 2015 08:56 AM
Last Updated : 18 Sep 2015 08:56 AM

சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா? - அச்சத்தில் காவிரி டெல்டா விவசாயிகள்

கர்நாடக அரசின் கூற்றில் சந்தே கம் உள்ளதால், மத்திய நீர்வள ஆணையக் குழு கர்நாடக அணை களை நேரடி ஆய்வு செய்ய வேண்டும் என தமிழகத்தின் விவசாய சங்க நிர்வாகிகள் வலியுறுத்துகின்றனர்.

கர்நாடகத்தில் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் வராததால், காவிரி டெல்டா சாகுபடிக்காக வழக்கமாக ஜூன் 12-ம் தேதி திறக்க வேண்டிய மேட்டூர் அணை, இந்த ஆண்டும் ஆகஸ்ட் 9-ம் தேதிதான் திறக்கப்பட்டது.

நேற்று (செப்டம்பர் 17) காலை நிலவரப்படி மேட்டூர் அணையில் உள்ள 74.12 அடி தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 13,800 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதைக் கொண்டு இன்னும் 20 நாட்களுக்கே தண்ணீர் திறக்க முடியும்.

தஞ்சாவூர் (2.62 லட்சம் ஏக் கர்), திருவாரூர் (3 லட்சம்), நாகப் பட்டினம் (2.55 லட்சம்) என டெல் டாவில் சுமார் 8.29 லட்சம் ஏக்கரில் ஒருபோக சம்பா சாகுபடி நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நீண்டகால (140 முதல் 150 நாள்) பயிரான சம்பாவுக்கு ஜனவரி வரையும், குடிநீருக்கும் தண்ணீர் தேவை என்ற நிலையில், இப்போதே, ஆங்காங்கே தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் காய்வதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், தமிழக முதல் வர் ஜெயலலிதா, “ஒருபோக சம்பா சாகுபடியைக் காப்பாற்ற, காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி, ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை தமிழகத்துக்கு தர வேண்டிய 94 டிஎம்சி தண்ணீரில், மாதந்தோறும் தரவேண்டிய நிலுவை தண்ணீர் 27 டிஎம்சியை கர்நாடக அரசு திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

இந்தக் கடிதம் கர்நாடக அர சுக்கு அனுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர், “பருவ மழை பொய்த்ததால், கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லை, வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. குடிநீருக்கே பற்றாக் குறை உள்ளது. அதனால், தண் ணீர் திறக்க இயலாது” என தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால், மத்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையில் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை காவிரி நீர்பிடிப்புப் பகுதியான குடகில் வழக்கமான சராசரி மழையும், மைசூரு, மாண்டியாவில் வழக்கத் தைவிட கூடுதலான மழையும் பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

செப்டம்பர் 15-ம் தேதி நிலவரப் படி கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய அணைகளில் மொத்தம் 69.58 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளதாக கர்நாடக அரசின் இயற்கை இடர்பாடு கண் காணிப்பு மையம் பதிவு செய் துள்ளது.

இதில் இருந்து, தமிழகத்துக்கு தரவேண்டிய 27 டிஎம்சி தண் ணீரை விடுவித்தால், இந்த ஆண்டு சம்பா சாகுபடியை பாதிப்பில்லா மல் முடித்துவிடலாம் எனக் கூறப் படுகிறது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவுமான கே.பாலகிருஷ் ணன், “அணைகளின் நீர் இருப்பை கண்காணிக்க மத்திய அமைப்பு எதுவும் இல்லாததால், கர்நாடகம் இப்படி சொல்கிறது.

தமிழக அரசு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் (இந்திய கம்யூனிஸ்ட்) வே.துரைமாணிக் கம், “மத்திய குழுவை அனுப்பி, கர்நாடக அணைகளை ஆய்வு செய்து, கவலையில் உள்ள காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கர்நாடக அரசின் கூற்றை ஏற்க முடியாது

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரங்கநாதன் கூறியபோது, “கர்நாடக அரசின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. உச்ச நீதிமன்றம் இடைக்காலமாக அமைத்த காவிரி மேற்பார்வைக் குழுவை (மத்திய நீர்வளத் துறைச் செயலாளர், தமிழக- கர்நாடக தலைமைச் செயலாளர்களைக் கொண்டது) உடனடியாகக் கூட்டி, கர்நாடக அணைகளை நேரடி ஆய்வு செய்ய வேண்டும். குடிநீருக்குப் போக, மீதமுள்ள தண்ணீரை 2 மாநிலங்களும் பங்கிட்டுக்கொள்ள வேண்டும்” என்றார்.

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், “நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, உடனடியாக மத்திய நீர்வள ஆணைய குழுவை அனுப்பி அணைகளை ஆய்வு செய்ய வேண்டும். அந்த குழுவின் அறிக்கையை, காவிரி மேற்பார்வைக் குழு ஏற்று செயல்படுத்த வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x