Published : 14 Sep 2020 07:20 AM
Last Updated : 14 Sep 2020 07:20 AM

கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு; புதிதாக 800 மருத்துவர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை

கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் புதிதாக 800 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி, வணிக நிறுவனங்கள் திறப்பு உள்ளிட்ட ஏராளமான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நவம்பரில் உச்சம் தொடும்

இதற்கிடையே, வைரஸ் தொற்று, வரும் நவம்பர் மாதத்தில்உச்சத்தை தொடும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதனால், மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது.

அதன் ஒருபகுதியாக கரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த மருத்துவ துணைப் படிப்புகளை படிக்கும் மாணவர்களை உடனடியாக கல்லூரிகளுக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதுமுதுநிலை மருத்துவம் முடித்த 800 மருத்துவர்களை பணி நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 800 மருத்துவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். ஏற்கெனவே, சில மாதங்களுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட 1,000 மருத்துவர்கள், 1,500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கரோனா தடுப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x