Published : 14 Sep 2020 07:14 AM
Last Updated : 14 Sep 2020 07:14 AM

கரோனாவுக்கு பிறகு சித்த மருத்துவத்தின் அவசியம் குறித்து தாம்பரம் தேசிய சித்தா நிறுவனத்தில் கருத்தரங்கு: இணையவழியில் 200 மருத்துவர்கள் பங்கேற்பு

தேசிய சித்தா நிறுவனத்தில் நடந்த இணையவழி கருத்தரங்கில், கரோனாவுக்கு பிறகு ஏற்படக்கூடிய பாதிப்புகள், அதற்கான சித்த மருத்துவ முறைகள் குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ முறைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆயிரக்கணக்கானோர் குணமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்தா நிறுவனம் மற்றும்மருத்துவமனை சார்பில் ‘கரோனாதொ்ற்றுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கான சித்த மருத்துவ முறைகள்’ குறித்து இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்கள், சித்த மருத்துவ மாணவர்கள் பதிவு செய்து பங்கேற்றனர்.

பாதிப்புகள் மற்றும் மருத்துவம்

இதில், கரோனாவில் இருந்துகுணமடைந்த பிறகு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதற்கு முறையான மருத்துவம் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சித்தா நிறுவனத்தின் இயக்குநர் மீனாகுமாரி பேசினார்.

டெல்லியின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தை சேர்ந்த பொது சுகாதாரத் துறை வல்லுநர் வளன் பேசும்போது, கரோனா வைரஸ் பரவல், நோய் தடுப்பு முறை, தனிமனித பாதுகாப்பு கவசங்களின் பயன்பாடு பற்றி விரிவாக விளக்கினார்.

கரோனா தொற்று நிலையில் நோய் எதிர்ப்புத் திறன் செயல்பாடுகள் பற்றி சித்தா நிறுவனத்தின் உதவி பேராசிரியர் ராமச்சந்திரன் எடுத்துரைத்தார்.

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதற்கான சித்த மருத்துவ முறைகள் பற்றி பேராசிரியர் முத்துக்குமார், உதவி பேராசிரியர் செந்தில்குமார் விரிவாகப் பேசினர். நிறைவாக, கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் உதவி பேராசிரியர் சுபா நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x