Last Updated : 08 Sep, 2020 10:12 PM

 

Published : 08 Sep 2020 10:12 PM
Last Updated : 08 Sep 2020 10:12 PM

நிறைவுற்றது வேளாங்கண்ணி திருவிழா

பக்தர்கள் அதிகமின்றி எளிமையாக, மிகமிக பாதுகாப்பான முறையில் நடைபெற்று முடிந்திருக்கிறது வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழா

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புகழபெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டுத் திருவிழா பக்தர்கள் அதிகமின்றி மிகமிக எளிமையாக நடைபெற்று இன்றுடன் நிறைவு பெற்றது.

வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத் திருவிழா கடந்த மாதம் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டு வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப் படவில்லை.

கொடியேற்ற நாளில் தஞ்சை மறைமாவட்ட ஆயர், பேராலய அதிபர் உட்பட மொத்தம் 30 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப் பட்டிருந்தது.

அதன்பின்னர் ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலிகள் அனைத்தும் பக்தர்கள் இன்றியே நடைபெற்று வந்தது. நான்காம் கட்ட தளர்வுகளில் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப் பட்டபோதும் கூட வெளியூர், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப் படவில்லை. வேளாங்கண்ணி பேரூராட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப் பட்டது.

இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வுக களான் பெரிய தேர் பவனி நேற்றும், திருவிழா சிறப்பு திருப்பலி மற்றும் கொடி இறக்கம் ஆகியவை இன்றும் நடைபெற்றது. இன்று மாலை நடைபெற்ற கொடியிறக்கம் மற்றும் திருவிழா சிறப்பு திருப்பலியில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கலந்துகொண்டு சிறப்புற நடத்தி வைத்தார்.

கொடியிறக்கம் மூலம் இந்த ஆண்டு திருவிழா நிறைவு பெற்றது. இந்த இரண்டு நாட்களிலும் உள்ளூர் பக்தர்களுக்கும் கூட அனுமதி வழங்கப்பட வில்லை.

மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஜெயராம். தலைமையில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் மேற்பார்வையில் மூன்று துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆறு ஆய்வாளர்கள், 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வெளியூர் பக்தர்கள் உள்ளே வராதவாறு வேளாங்கண்ணி நகரை சுற்றி ஒன்பது சோதனை சாவடிகள் என மாவட்டம் முழுவதும் 21 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் வேளாங்கண்ணி பேராலய திருவிழா நடைபெற்று முடிந்தது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x