Published : 08 Sep 2020 07:59 AM
Last Updated : 08 Sep 2020 07:59 AM

சென்னையில் கரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோர் அண்ணாநகர், கோடம்பாக்கம் மண்டலங்களில் அதிகம்

சென்னையில் தற்போது அண்ணாநகர் மற்றும் கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் அதிகமாக உள்ளனர்.

சென்னையில் செப்டம்பர் 6-ம் தேதி நிலவரப்படி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 41 ஆயிரத்து 654 ஆகஉயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 528 ஆகஉயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 14,521 பேர்,அண்ணாநகர் மண்டலத்தில்14,491 பேர் குணமடைந்துள்ளனர்.

2,862 பேர் உயிரிழப்பு

சென்னையில் இதுவரை2,862 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக தேனாம்பேட்டைமண்டலத்தில் 390 பேர் உயிரிழந்துள்ளனர். மாநகரம்முழுவதும் தற்போது 11,264பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாகஅண்ணாநகர் மண்டலத்தில் 1,254 பேர், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இப்பகுதியில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “இவ்விரு மண்டலங்களிலும் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள், பரிசோதனை எண்ணிக்கை ஆகியவற்றை அதிகப்படுத்தி இருக்கிறோம். மேலும் வீடு வீடாக ஆய்வு செய்வதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் கரோனா தொற்று விரைவில் கட்டுப்படுத்தப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x