Last Updated : 07 Sep, 2020 05:40 PM

 

Published : 07 Sep 2020 05:40 PM
Last Updated : 07 Sep 2020 05:40 PM

கரோனா சிகிச்சைக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான படுக்கைகள் தயார்: நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல்

திருநெல்வேலி 

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதியுடன் மருத்துவமனைகள் தயாராக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் 9 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கிய ஆட்சியர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் கடந்த 25.8.2020 வரை சிகிச்சை பலனின்றி 285 நோயாளிகள் இறந்துள்ளனர்.

அவர்களில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 182 பேர். மற்றவர்கள் தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். மாவட்டத்தில் உயிரிழப்புகள் ஏதுவும் மறைக்கப்படவில்லை.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. மேலும் வழிபாட்டு தலங்களில் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் கரோனாவின் தாக்கம் அதிகமாக வாய்ப்புகள் உள்ளன. எனவே பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாமல் கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனைகள் தயாராக உள்ளன. ஏற்கனவே இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள 3 மருத்துவமனைகளில் 750 படுக்கைகள் பயன்படுத்தாமலேயே உள்ளது என்று தெரிவித்தார்.

கரோனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சுகாதாரத் துறையினர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்படாமலே உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது , இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதற்குமுன் உள்ளாட்சி மன்றங்களுக்கும் முறையாக தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x