Published : 06 Sep 2020 06:25 PM
Last Updated : 06 Sep 2020 06:25 PM

செப்.6 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,63,480 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,070 2,637 401 32
2 செங்கல்பட்டு 28,311

25,131

2,723 457
3 சென்னை 1,41,654 1,27,528 11,264 2,862
4 கோயம்புத்தூர் 18,955 13,831 4,796 328
5 கடலூர் 14,060 10,176 3,742 142
6 தருமபுரி 1,445 1,175 256 14
7 திண்டுக்கல் 7,278 6,148 991 139
8 ஈரோடு 3,842 2,645 1,147 50
9 கள்ளக்குறிச்சி 6,965 5,835 1,045 85
10 காஞ்சிபுரம் 18,311 16,617 1,428 266
11 கன்னியாகுமரி 10,217 9,104 918 195
12 கரூர் 1,845 1,466 350 29
13 கிருஷ்ணகிரி 2,561 1,973 555 33
14 மதுரை 14,775 13,423 986 366
15 நாகப்பட்டினம் 3,325 2,172 1,100 53
16 நாமக்கல் 2,614 1,962 609 43
17 நீலகிரி 1,897 1,502 381 14
18 பெரம்பலூர் 1,418 1,302 99 17
19 புதுகோட்டை 6,680 5,602 969 109
20 ராமநாதபுரம் 4,974 4,531 334 109
21 ராணிப்பேட்டை 11,315 10,388 795 132
22 சேலம் 12,654 89,380 3,092 182
23 சிவகங்கை 4,256 3,945 202 109
24 தென்காசி 5,812 5,021 683 108
25 தஞ்சாவூர் 7,450 6,356 973 121
26 தேனி 13,158 12,158 850 150
27 திருப்பத்தூர் 3,232 2,733 432 67
28 திருவள்ளூர் 26,311 24,275 1,600 436
29 திருவண்ணாமலை 11,701 10,056 1,469 176
30 திருவாரூர் 4,219 3,538 626 55
31 தூத்துக்குடி 11,738 10,961 662 115
32 திருநெல்வேலி 10,315 8,957 1,171 187
33 திருப்பூர் 3,459 2,300 1,079 80
34 திருச்சி 8,123 7,074 926 123
35 வேலூர் 11,668 10,391 1,102 175
36 விழுப்புரம் 8,395 7,168 1,148 79
37 விருதுநகர் 13,251 12,589 465 197
38 விமான நிலையத்தில் தனிமை 922 901 20 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 876 809 67 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 4,63,480 4,04,186 51,458 7,836

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x