Published : 03 Sep 2020 06:49 PM
Last Updated : 03 Sep 2020 06:49 PM

மதுரை ஈக்கோ பார்க் திறக்கப்படுமா?- நடைப்பயிற்சி செல்ல முடியாமல் பொதுமக்கள் தவிப்பு

மதுரை

அரசு ஊரடங்கு தளர்வு வழங்கியும், தினமும் 500க்கும் மேற்பட்டோர் நடைப்பயிற்சி செல்லும் எக்கோ பார்க் (சுற்றுச்சூழல் பூங்கா) திறக்கப்படாததால் பொதுமக்கள் நடைப்பயிற்சி செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொழில் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் 100 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதுபோல், அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

மால்களும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளன. ஆனால், மதுரையில் முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் தினமும் உடல் ஆரோக்கியத்திற்காக நடைப்பயிற்சி செல்லும் பல பூங்காக்கள் மூடிக்கிடக்கின்றன.

மதுரை மாதநகராட்சியில் 100 வார்டுகளில் மொத்தம் 54 பூங்காக்கள் உள்ளன. சமீபத்தில் அனைத்து பூங்காக்களும் அம்ரூத் திட்டத்தில் புதுப்பிக்கப்பட்டன.

இதில், ஈக்கோ பார்க்(சுற்றுச்சூழல் பூங்கா) , தமுக்கம் ராஜாஜி பூங்கா போன்றவை முக்கியமானவை. இந்த இரு பூங்காக்களில் தமுக்கம் ராஜாஜி பூங்காவை தவிர மற்ற அனைத்து பூங்காக்களிலும் அந்தந்த குடியிருப்பு பகுதி மக்கள், தினமும் நடைப்பயிற்சி செல்கின்றனர்.

பூங்காவில் உள்ள உடற்பயிற்சி சாதனைகளை பயன்படுத்தி உடற்பயிற்சி செய்வார்கள். தற்போதைய இயந்திர வாழ்வில் உடற்பயிற்சிக்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

அதனால், 35 வயதிற்கு மேல் பெரும்பாலானவர்களுக்கு பல்வேறு உடல் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகிறது. அதற்கு மருத்துவர்கள், தினமும் தவறாமல் நடைப்பயிற்சியும், உடற்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறுகின்றனர்.

ஆனால், மதுரைப்போன்ற மாநகராட்சிகளில் பூங்காவை தவிர நடைப்பயிற்சி செல்வதற்கு இடம் இல்லை. அதனால், தற்போது பூங்காக்களை குழந்தைகளை விளையாடுவதற்கும், பொழுதுப்போக்கிற்கும் பயன்படுத்துவதை காட்டிலும் பொதுமக்கள் நடைப்பயிற்சிக்காக அதிகளவு பயன்படுத்துகின்றனர்.

மதுரை நகர்பகுதியில் அதிகாலை முதல் இரவு வரை சாலைகள், தெருக்களில் வாகனப்போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். அதனால், சாலைகளில் மக்கள் நடைப்பயிற்சி செல்ல வாய்ப்பே இல்லை. குடியிருப்பு பகுதிகளையொட்டி அமைந்துள்ள பூங்காக்களில் பொதுமக்கள் நடைப்பயிற்சி சென்றுவந்தனர்.

ஆனால், கடந்த 5 மாதமாக கரோனா தொற்று நோயால் அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் நடைமுறைக்குவந்தநிலையில் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், மதுரையில் மதுரை கே.கே.நகர், அண்ணா நகர், தல்லாக்குளம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட நகரின் மையப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஈக்கோ பார்க்

நடைப்பயிற்சி செல்வார்கள். தற்போது அரசு பூங்காவை திறக்க அனுமதி வழங்கியும், இந்த பூங்கா திறக்கப்படவில்லை. ராஜாஜி பூங்கா முழுக்க முழுக்க

குழந்தைகள் பொழுதுப்போக்காக செயல்படுகிறது. அதனால், பூங்காவை திறக்க வாய்ப்பில்லை. ஆனால், பொதுமக்கள் அதிகளவு நடைப்பயிற்சி, உடற்பயிற்சிக்காக பயன்படுத்தும் ஈக்கோ பார்க்கையும் மாநகராட்சி திறக்காமல் இருப்பதால் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செல்ல முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த பூங்காவில் தினமும் காலை நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சிக்கு இலவசமாக அனுமதிக்கப்பட்டு வந்தனர்.மாலை நேரத்தில் மட்டுமே பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகள் நடக்கிறது. அந்த நேரத்தில் ரூ.5 கட்டணத்தில் மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அதனால், மாலை நேரத்தில் எக்கோ பூங்காவை திறக்காமல் காலை நேரத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி செல்ல அனுமதிக்க வேண்டும். கரோனா ஊரட. கால் வீட்டிற்குள் முடங்கிய பொதுமக்கள் நடைப்பயிற்சி செல்ல முடியாமல் பல்வேறு உடல் பாதைகளால் பாதிக்கப்பட்டனர். பலர், நடைப்பயிற்சி செல்ல முடியாமலே உடல்நலன் மிகவும் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி உள்ளனர். அதனால், மாநகராட்சி நிர்வாகம் ஈக்கோ பூங்காவையும், மாநகராட்சியின் மற்ற குடியிருப்பு பகுதியில் திறக்கப்டடாமல் உள்ள பூங்காக்களையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ராஜாஜி பூங்காவும், சுற்றுச்சூழல் பூங்காவும் பொழுதுப்போக்கு பூங்காக்கள் பட்டியலில் உள்ளது. அதனால், அங்கு குழந்தைகளும் வர வாய்ப்புள்ளது. அதனால், தற்போது திறக்கப்படவில்லை. ஆனால், காலையில் நடைப்பயிற்சி செல்வதற்காக பூங்காவை திறக்கலாம் என்ற ஆலோசனையும் நடக்கிறது, ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x