Published : 08 May 2014 08:36 AM
Last Updated : 08 May 2014 08:36 AM

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து மேல்முறையீடு: தமிழர் வீர விளையாட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தினர் முடிவு

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப் பட்ட தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய தமிழர் வீர விளையாட்டு பாதுகாப்புச் சங்கம் முடிவு செய்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக 2007-ம் ஆண்டு விலங்குகள் நலவாரியம் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டு, தமிழகத்தில் ஜல்லிக்கட் டுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் தமிழக அரசு வாதிட்ட தன் அடிப்படையில் ஜல்லிக் கட்டு நடத்த பல்வேறு வழிகாட் டுதல்களுடன் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. 2009-ம் ஆண்டு ‘ஜல்லிக்கட்டு முறைப் படுத்தும் சட்டம்’ தமிழக சட்ட சபையில் இயற்றப்பட்டதன் மூலம் சில ஆண்டுகளாக ஜல் லிக்கட்டு நடத்தப்படுகிறது. அப்போது பல இடங்களில் உச்ச நீதிமன்ற வழிகாட்டு தலைப் பின்பற்றவில்லை என விலங்குகள் நல வாரியம் சாரபில் உச்ச நீதிமன்றத்தில் ஆதாரங்கள் அளிக்கப்பட்டன. அதன்பேரில் ஜல்லிக்கட்டுக்கு முற்றிலும் தடை விதித்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இந்த உத்தரவு தென் மாவட்ட மக்களிடம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய தமிழர் வீர விளையாட்டு ஜல்லிக் கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் முடிவு செய்துள்ளது.

இதுபற்றி அதன் மாநிலச் செயலர் ஒண்டிராஜ் கூறிய தாவது: ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

தமிழக கிராமம்தோறும் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நாள டைவில் குறைந்துகொண்டே வருகிறது. நடப்பு ஆண்டில் இதுவரை 26 இடங்களில் நடைபெற்றுள்ளது. இவை மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. முன்னிலையில் நடைபெற் றவை. இதனால் ஜல்லிக்கட் டின்போது விதிமீறல்கள் வெகு வாகக் குறைந்துவிட்டன.

எங்கேனும் விதிமீறல் இருந்தால் அந்த ஊரில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கலாம். அதை விடுத்து ஒட்டுமொத்தமாக தடை விதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தடை உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து இதுபற்றி பேசவும் முடிவு செய்துள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x